‛ஸ்கெட்ச்’ போட்ட தந்தை: முந்தி முடித்த கொலைவெறி காதல்

தன் காதலியின் தந்தை தன்னை தீர்த்துக்கட்ட ஏற்பாடு செய்த ஆளை, முந்திக் கொண்டு கொலை செய்த காதலனின் ‛கொலை வெறி’ காதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US: 

திண்டுக்கல் மாவட்டம் மாலைபட்டியை சேர்ந்தவர் கணேசன். பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியின் துணைத் தலைவராக உள்ளார். இவரது மகள் ஷர்மிளாவுக்கு அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரனுடன் காதல் இருந்துள்ளது. முனீஸ்வரன் உறவினர் என்றாலும் அவர் மீதான வழக்குகள் காரணமாக கணேசனுக்கு அவரை ஏற்க மனமில்லை. பலமுறை கண்டித்தும் இருவரும் காதலை கைவிடுவதுமாக இல்லை. இதனால் ஆத்திமடைந்த கணேசன் , பாலமரத்துபட்டியை சேர்ந்த தனது நண்பன் முருகேசனிடம் விபரத்தை கூறி அழுதுள்ளார்.‛ஸ்கெட்ச்’ போட்ட தந்தை: முந்தி முடித்த கொலைவெறி காதல்

‛விடுப்பா... நீ ஏன் கவலைப்படுற... அவனை காலி பண்ணிடுவோம்...’ என, கணேசனை தேற்றியுள்ளார் முருகேசன். இருவரும் சேர்ந்து தீர்த்துக்கட்ட தீட்டிய திட்டம், எப்படியோ முனீஸ்வரனின் காதுகளுக்கு எட்டியது. ‛என்னையா தீர்த்துக்கட்ட பார்க்குறீங்க... இருங்க உங்களை போட்டுத் தள்றேன்...’ என அவர்களுக்கு முன் முந்த தயாரானார் முனீஸ்வரன். ‛ஸ்கெட்ச்’ போட்ட தந்தை: முந்தி முடித்த கொலைவெறி காதல்

தன் சகாக்களுடன் இணைந்து முதலில் முருகேசனுக்கு குறி வைத்தார் . 45 வயது பால் வியாபாரியான முருகேசன், மாலைப்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர்., நகருக்கு பால் ஊற்ற வந்த போது அவரை வழிமறித்த முனீஸ்வரன் டீம், ‛என்னப்பா என்னை நீங்க காலி பண்றீங்களா... என் காதலுக்கு குறுக்கே யார் வந்தாலும் இனி இது தான் கதி,’ என முருகேசனை சரமாறியாக வெட்டி படுகொலை செய்தனர்.‛ஸ்கெட்ச்’ போட்ட தந்தை: முந்தி முடித்த கொலைவெறி காதல்

முருகேசனுக்கு பாப்பாத்தி என்ற மனைவியும், நான்கு மகள்களும் உள்ளனர். மூன்று மகள்களுக்கு திருமணம் ஆன நிலையில், கடைசி பெண்ணுக்கு திருமணம் செய்வதற்காக முருகேசன் கடுமையாக உழைத்து வந்துள்ளார். அந்த நிலையில் தான் நண்பனுக்கு உதவப் போய் உயிரை விட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காதலுக்காக எந்த லெவலுக்கும் செல்ல முனீஸ்வரன் தயாரானது தெரியவந்தது.‛ஸ்கெட்ச்’ போட்ட தந்தை: முந்தி முடித்த கொலைவெறி காதல்

அவர்களின் அடுத்த குறி காதலியின் தந்தையான கணேசன் தான் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முனீஸ்வரன் தலைமையிலான கும்பலை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். தனக்கு ஸ்கெட்ஜ் போட்டவரை முந்திக் கொண்டு காதலன் சம்பவம் செய்த சம்பவம், திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags: murder dindugal dgl murder

தொடர்புடைய செய்திகள்

PTR on Wearing Watch: ‛டபுள் வாட்ச்’ மீம்ஸ்... இரண்டு வாட்ச் அணிவது குறித்து மனம் திறந்த பி.டி.ஆர்!

PTR on Wearing Watch: ‛டபுள் வாட்ச்’ மீம்ஸ்... இரண்டு வாட்ச் அணிவது குறித்து மனம் திறந்த பி.டி.ஆர்!

DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?

DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?

TN Lockdown: ஊரடங்கு தொடர்பாக நாளை முதல்வர் ஆலோசனை: சென்னைக்கு கட்டுப்பாடு?

TN Lockdown: ஊரடங்கு தொடர்பாக நாளை முதல்வர் ஆலோசனை: சென்னைக்கு கட்டுப்பாடு?

மதுபானம் வாங்க முண்டியடிப்பு; மிலிட்ரி கேண்டினுக்கு ‛சீல்’ வைப்பு

மதுபானம் வாங்க முண்டியடிப்பு; மிலிட்ரி கேண்டினுக்கு ‛சீல்’ வைப்பு

”பாரத நாட்டை யாராலும் பிரிக்கமுடியாது.. அப்படிச் சொன்னால்!” - முதல்வரிடம் விளக்கம் கேட்கும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ..!

”பாரத நாட்டை யாராலும் பிரிக்கமுடியாது.. அப்படிச் சொன்னால்!” - முதல்வரிடம் விளக்கம் கேட்கும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ..!

டாப் நியூஸ்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?