Trichy power cut: திருச்சியில் நாளை (19-05-2026) இத்தனை இடங்களில் மின் தடையா? இதோ முழு பட்டியல்!
Trichy power cut (19-05-2026): திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 19, 2026, செவ்வாய்க் கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாட்களில் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி
மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பட்டியங்காடு பட்டி , ஆலத்துடையான்பட்டி, பெருகனூர், கலிங்கப்பட்டி
வெள்ளியனூர்
உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணபுரம், வலையடுப்பு
கள்ளக்குடி, வடுகர்பேட்டை, வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பூர், தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கள்ளூர், தாத்தையம்பட்டி, கெடாயச்சலூர் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.
என்ன காரணம்?
மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, காலை 09:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வெட்டு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடையில் செய்ய வேண்டியது என்ன?
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















