Breaking Live | ட்விட்டர் CEO-ஆக பதவியேற்கிறார் பரக் அக்ராவல்
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
ட்விட்டர் CEO-ஆக பதவியேற்கிறார் பரக் அக்ராவல்
ட்விட்டர் CEO Jack Dorsey பதவி விலகுவதாக தகவல்..
நகர்ப்புற ஊராட்சி தேர்தலில், தேமுதிக தனித்து போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது
பேச்சு சுதந்திரத்துக்கு வரையறை உண்டு - சென்னை உயர்நீதிமன்றம். முதல்வர் குறித்து அவதூறாக பேசிய ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது
அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென், சிவசேனா ப்ரியங்கா சதுர்வேதி ஆகியோர் சஸ்பெண்ட்
மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டன
பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பிவருவதால் 18,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது இது மேலும் அதிகரிக்கப்படும். கொசஸ்தலை ஆற்றின் கரைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இப்பகுதி மக்களின் கைப்பேசிக்கு பொது தகவல் நெறிமுறை (CAP)மூலம் எச்சரிக்கை வழங்கப்பட்டது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்; குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது
அனைத்து வகையான வேளாண் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் முன்பு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற கோவிட்-19 மெகா தடுப்பு மருந்து முகாமில் 16 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
இந்த கூட்டத்தொடர் மிக முக்கியமானது ; நாடாளுமன்றத்தை நல்ல முறையில் நடத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை.
வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்வதில் தெலுங்கானா மாநிலம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறி தெலுங்கானா டிஆர்எஸ் எம்.பி ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார்.
அனைத்து வகையான வேளாண் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பதை சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கேள்வி நேரத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி கொடுத்துள்ளார்.
குறைந்த ஆதார விலை தொடர்பான சட்டம் & உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி திமுக எம்பி டி.ஆர்.பாலு சார்பில் மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொண்டுவரவுள்ளார்
இன்றையக் கூட்டத் தொடரில், வேளாண் பொருட்களுக்காக வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டவடிவம் கொடுக்க காங்கிரஸ், திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதா தளம், டிஆர்எஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் முடிவெடுத்துள்ளனர்.
மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறும் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டவுடன், மாநிலங்களையிலும் உடனடியாக மசோதாவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் - கூட்டத்தை சுமூக முடிக்க மத்திய அரசு ஆலோசனை
இன்று அதிகாலை 4 மணியளவில் வேலூர் மாவட்டத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் இந்த நடுக்கம் 3.6 புள்ளிகள் பதிவானது.
திருவண்ணாமலை, கடலூர், ராணிப்பேட்டை, தருமபுரி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
தஞ்சை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வரும் விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களுக்கும். விட்டு விட்டு மழை பெய்துவரும் திண்டுக்கல் மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கனமழை அபாயம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
Background
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -