மேலும் அறிய
Advertisement
உயிருக்கு போராடிய மாணவரை காப்பாற்றிய செவிலியர் - முதல்வருக்கு டேக் செய்து எம்.எல்.ஏ பாராட்டு
’’மயங்கி கிடந்த மாணவரின் மார்பின் மீது தனது கைகளால் அழுத்தி முதலுதவி அளித்த நிலையில் மாணவரின் இதயத்துடிப்பு மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது’’
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விபத்தில் காயம் அடைந்து மயங்கி கிடந்த கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூர் தோட்டத்தை சேர்ந்தவர் வனஜா. இவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள சிராங்குடி என்ற ஊருக்கு தனது கணவர் ஆனந்தன் மற்றும் இரு குழந்தைகளுடன் சென்று விட்டு காரில் மன்னார்குடி திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது மதுக்கூர் வழியில் பாலம் சேதம் அடைந்திருந்தால் வடசேரி சாலை வழியாக அவர் மன்னார்குடிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடியை நெருங்கும்போது ஆறாம் நம்பர் வாய்க்கால் குறிப்பிடும் பகுதியில் இவர்களது கார் சென்று கொண்டிருந்த பொழுது இவரது காருக்கு முன்னாள் இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வாலிபரின் இருசக்கர வாகனத்திற்கு முன்னாள் ஆடு வந்ததால் ஆட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி அந்த வாலிபர் கீழே விழுந்து பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார்.
இதைக்கண்ட வனஜா உடனடியாக காரை நிறுத்தி அருகில் சென்று வாலிபரை பரிசோதனை செய்தார். அப்பொழுது அவரது நாடித்துடிப்பு குறைந்து வாலிபர் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதை தொடர்ந்து உடனடியாக செயலில் இறங்கிய செவிலியர் வனஜா இதயத்துடிப்பு மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வரும் முதலுதவி சிகிச்சை அளித்தார் மயங்கி கிடந்த வாலிபரின் மார்பின் மீது தனது கைகளால் அழுத்தி அவர் சிகிச்சை அளித்துள்ளார். இதனால் மீண்டும் வாலிபரின் இதய துடிப்பு பழைய நிலைமைக்கு திரும்பி நாடித்துடிப்பு சீரானது. பின்னர் அவருக்கு சுயநினைவு திரும்பியது. இதற்கிடையே வனஜாவின் கணவர் ஆனந்தன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க ஆம்புலன்ஸ் வந்து சேர்த்தது. இதன் பின் உடனடியாக ஆம்புலன்சில் அந்த வாலிபரை ஏற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் காயம் அடைந்த வாலிபர் குறித்து நடத்திய விசாரணையில் அவர் மன்னார்குடி அருகே உள்ள கருவாக்குறிச்சி சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் வசந்த் என்பதும் அவர் மல்லிபட்டினம் அருகே உள்ள மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
பின்னர் வசந்த் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வசந்த் ஆபத்து நிலையிலிருந்து மீண்ட பிறகு செவிலியர் அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டுக்கு சென்றார். விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் செவிலியர் வனஜா கல்லூரி மாணவருக்கு உதவிய சம்பவம் சமூகவலை தளங்களில் அதிகளவில் பரவி வந்த நிலையில் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து செவிலியர் வனஜாவிற்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தனது முகநூல் பக்கத்தில் ஒருவரின் உயிரை காப்பாற்றிய செவிலியர் பணி பாராட்டுக்குரியது அவரை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவருடைய செயல் மிகுந்த பாராட்டுக்குரியது என தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வரை டேக் செய்து பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion