செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்


பணமோசடி செய்ததாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். அதனை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் டிஸ்சார்ஸ் செய்யப்படுள்ளார்.மேலும் வாசிக்க..


10, 12ஆம் வகுப்புகளுக்கு இனி 2 பொதுத்தேர்வுகள்


நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு கட்டாயமில்லை என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க..


கனமழை எச்சரிக்கை


தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.மேலும் வாசிக்க..


உலக அஞ்சல் தினம் 


உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு சேலம் உடையாபட்டி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 6,500 மாணவர்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. நவீன உலகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி தங்களது தகவல்களை பரிமாறி வருகின்றனர். இது 6,500 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதங்களை எழுதியவர். இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம் குறித்தும், கடிதம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் கடித ஆர்வலர் ஈசன் இளங்கோ மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதன்பின் மாணவர்கள் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி அஞ்சல் பெட்டியில் மகிழ்ச்சியுடன் தங்களது கடித்ததை அனுப்பினர்.மேலும் வாசிக்க..


'வேள்பாரி' - பிரெயிலியில் மொழியாக்கம் நூல் வெளியீடு


 ப்ரெய்ல் அச்சகம் மற்றும் பார்வையற்றோர் பள்ளியின் ஆசிரியர்கள் இணைந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவலை பார்வையற்றோர் படிக்கும் ப்ரெய்ல் மொழியில் மொழியாக்கம் செய்திருந்தனர்‌. மொழியக்கம் செய்யப்பட்டிருந்த நூலினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்டார், அதனை இந்தியன் வங்கியில் பணியாற்றும் பார்வை மாற்றுத்திறனாளி பிரகாஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.மேலும் வாசிக்க..


அமைச்சர் கே.என்.நேரு உரை விவரம்


விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பஸ் நிலையத்தில் சிலர் அவர்களின் கட்சி தலைவரின் படத்தை ஒட்டுகிறார்கள். எதிர்க்கட்சியினர் இந்த திட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். கலைஞர் கட்டிய ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றை அ.தி.மு.க.வினர் திறந்து வைத்தார்கள். அப்போது நாங்கள்தான் திறப்போம் என்று செல்லவில்லை. எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அவர்கள்தான் திறந்து வைப்பார்கள். 8 ஆண்டுகளாக அ.தி.மு.க.வினர் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உங்களால் முடிக்க முடியவில்லை. மேலும் வாசிக்க..


முடிந்தது காலாண்டு விடுமுறை


தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து இன்று (அக்.9-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 6- 12ஆம் வகுப்பு வரை அக்.3 அன்றே பள்ளிகள் திறக்கப்பட்டன. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2023- 2024 கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ளது போன்றே அக்.3 முதல் இரண்டாம் பருவ வகுப்புகள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க.