கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வாக்கிய பஞ்சாங்கம் படி ராகு கேது  பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


 




வாக்கிய பஞ்சாங்கம் படி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆவதை ஒட்டி நவக்கிரக சுவாமிகளுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு,  திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், குங்குமம் அபிஷேக பொடி, பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராகு பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, கேது பகவானுக்கும் பட்டாடை உடுத்தி, மாலைகள் உள்ளிட்ட அலங்காரங்கள் நடைபெற்றது தொடர்ச்சியாக 03.40 மணியளவில் ராகு பகவானுக்கும், கேது பகவானுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. கூறியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ராகு கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பரிகார ராசிகளான மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், கும்பம், மீனம் உள்ளிட்ட ராசி சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் ஆலயத்தில் அர்ச்சனை செய்து தங்களது வழிபாடை நடத்தினர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.


தென் திருப்பதி கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.


 




 


தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  நடைபெற்ற சுவாமியின் திருவீதி உலாவில் கல்யாணம் வெங்கட்ரமணசுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.


 




 


உற்சவர் கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆலய மண்டபத்தில் சுவாமியை குதிரை வாகனத்தில் கொழுவிருக்க செய்தனர். மேளதாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து புறப்பட்ட கல்யாண வெங்கட்ரமண சுவாமி குதிரை வாகனத்தில் வீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார். ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் சுவாமியை மனம் உருகி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர்.