சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


சர்க்கரை நோய்  அதிகரிப்புஇரத்த அழுத்தம் காரணமாக திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.


செந்தில் பாலாஜி ஊழல் வழக்கு


அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. அந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணவர்த்தனையின் கீழ் வழங்க்குப் பதிவு செய்து விசாரணை நடந்திய நிலையில், கடந்த ஜூன் 14 ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது.


அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா ன்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த  இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.


செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவித்து வரும் செந்தில் பாலாஜி பிணைக் கோரி மனு தாக்கல் செய்தார். முதலில் இந்த பிணை மனு எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த மனு உயர்நீதிமன்றம் தான் விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. பின் உயர்நீதிமன்றத்தில், எந்த அமர்வு விசாரிக்கும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பிணை மனு மீதான விசாரணை சென்னை முதன்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில், அமலாக்கத்துறை தரப்புக்கும் செந்தில் பாலாஜி தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. ஆனால் இறுதியில் ஜாமீன் அளிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. 


உடல்நிலை குறைவு


செந்தில் பாலாஜிக்கு வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.  இவருக்கு பாலாஜிக்கு 7-வது முறையாக நீதிமன்றக் காவலை நீடித்து சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். 


செந்தில் பாலாஜி ஏற்கனவே, நெஞ்சு வழி காரணமாக ஆஞ்சியோ செய்ததால் கால் வீக்கம் ஏற்படுவது இயல்பு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். கால்வலி காரணமாக அவர் நடக்கமுடியாமல் வீல் சேரில் அழைத்து வரப்பட்டார். ரத்த அழுத்தம் பரிசோதனை , ஈ சி ஜி , மற்றும் இதர பரிசோதனைகள் முடிந்த பின்னர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட உள்ளதாக அவரின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்திருந்தார். சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைதுறை பிரிவு வார்டில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், செந்தில் பாலாஜி சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.