Vairamuthu: போரை நிறுத்துங்கள் புதின்; மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம்.. - கோரிக்கை வைத்த வைரமுத்து !
உக்ரைனில் நடைபெற்றும் வரும் போரை நிறுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து ரஷ்ய அதிபருக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனில் பல்வேறு பகுதிகளை ரஷ்யா தாக்கியுள்ளது. இதன்காரணமாக அங்கு இருக்கும் இந்திய மாணவர்களை இந்திய அரசு மீட்டு நாட்டிற்கு திருப்பி கொண்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது அங்கு ஒரு சில இடங்களில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போரை நிறுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து ரஷ்ய அதிபர் புதினிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், “போரை நிறுத்துங்கள் புதின் மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும் கரும்புகை வான் விழுங்கும் பகலை இருள் குடிக்கும் கடல்கள் தீப்பிடிக்கும் குண்டு விழாத நாடுகளிலும் ஏழைகளின் மண்பானை உடையும் ஆயுதம் மனிதனின் நாகரிகம்; போர் அநாகரிகம் வரை நிறுத்துங்கள் புதின்” எனக் கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் பிரச்னை என்ன?
உக்ரைன் நாடு 1991ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதன்பின்னர் தொடர்ந்து அங்கு உக்ரைன் நாட்டு அரசிற்கு எதிராக அவ்வப்போது கிளர்ச்சியாளர்கள் இருந்து வந்தனர். எனினும் தொடர்ந்து அங்கு ரஷ்யாவின் தலையீடு இருந்து கொண்டே வந்தது. 2005ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபராக வந்த விக்டர் யெஸ்சென்கோ ரஷ்யாவின் தலையீடுகளிலிருந்து உக்ரைன் நாட்டை முழுவதும் விடுபட வைப்பதாக கூறினார். 2010ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் இடையே ஒரு எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்தானது.
2013ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டு உடனான பொருளாதார வர்த்தகத்தை உக்ரைன் நாட்டு அதிபர் நிறுத்தினார். இதன்காரணமாக அங்கு தெற்கு பகுதியில் கடும் கிளர்ச்சி உருவானது. இதைத் தொடர்ந்து நாட்டின் தெற்கு பகுதியான கிரீமியாவை 2014ஆம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஆக்கிரமித்து ரஷ்ய கொடியை ஏற்றினர். அதன்பின்னர் கிரீமியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ஆதரவாளார்கள் அதிகம் உள்ளனர். அந்தப் பகுதியில் உக்ரைன் நாட்டு அரசு அமைதியை சீர்குலைக்கும் விதகமாக கடந்த சில மாதங்களாக நடந்து வருவதாக ரஷ்ய குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு காரணம் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் அந்நாட்டு அரசு ஒரு டிரோனை பயன்படுத்தியது. இது தான் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் மூழும் சூழல் உருவாக தொடக்க புள்ளியாக அமைந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்