மேலும் அறிய
Advertisement
வருமான வரி அதிகமாக பெறும் மாநிலம்; 4வது இடத்தில் தமிழ்நாடு
வருமான வரி அதிகமாக பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தகவல்
இந்தியாவிலேயே வருமான வரி அதிகமாக பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது என வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாடு முழுவதும் தேசிய அஞ்சல் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் உலக அஞ்சல் தினம், அஞ்சலக காப்பீடு மற்றும் பார்சல் தினம், வங்கி மற்றும் அஞ்சலக காப்பீடு தினம் என்று பல வகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இன்று வங்கி மற்றும் அஞ்சலக ஆயுள் காப்பீடு தினமாக கொண்டாடப்பட்டது.
தேசிய அஞ்சல் வாரத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் இருந்து தபால் காரர், அஞ்சலக எழுத்தர்,விற்பனை நிர்வாகி, அஞ்சல் ஆய்வாளர்உதவி கண்காணிப்பாளர் ஆகிய பிரிவுகளில் இருந்து ஒருவரை அவரின் சிறந்த ஓராண்டு பணி அடிப்படையில் அஞ்சல் சேவை விருது (தக் சேவ்) வழங்க தேர்ந்தெடுத்து, அதன் அடிப்படையில் 8 ஊழியர்கள் 2021ம் ஆண்டு சிறப்பான பணியின் அடிப்படையில் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இந்திய அஞ்சல் துறையானது 'உலக அஞ்சல் குழுமத்தின்' சார்பில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கடிதம் எழுதும் போட்டியை நடப்பாண்டில் நடத்தியது. இதில் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். சிறப்பான கடிதங்கள் அடிப்படையில் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் ரவிச்சந்திரன், (வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும் தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை தலைவர் செல்வகுமார், இயக்குநர் ஆறுமுகம் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில், "தபால் பொறுத்தவரை அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் பலரின் வாழ்வில் கதை சொல்லும் பாத்திரமாகவும் இருந்தது. நவீன காலத்தில் நமது செய்திகள் பெரும்பாலும் திருடப்படுகிறது. பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. ஆனால் தபால் காலங்களில் அவை பாதுகாப்பான முறையில் சென்றடைந்தன. இறுதியாக பேசிய அவர், இந்தியாவிலேயே வருமான வரி அதிகமாக பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது" என்று குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion