• TN Rain Alert: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம் இதோ..


மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  08.09.2023 & 09.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 10.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க 



  • ”சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என சொல்லும் திமுகவை ஒழிக்க வேண்டும்” - அண்ணாமலை காட்டம்


என் மண் - என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கிய இந்த பயணம் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து. திடீர் ஓய்விற்கு பின் மீண்டும் துவங்கியது. இந்நிலையில் நேற்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபயணத்தை துவங்கினார்., கொங்கப்பட்டியில் துவங்கி உசிலம்பட்டி முருகன் கோவில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபயணம் மேற்கொண்டார். மேலும் படிக்க 




  • Chennai Bangalore Expressway: சென்னை - பெங்களூருக்கு இனி 2 மணிநேரம்தான்.. ஜனவரியில் வரப்போகுது அதிவிரைவுச் சாலை..!




நாட்டின் மத்திய போக்குவரத்து அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் நிதின் கட்கரி. இவர் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, சென்னை - பெங்களூரு இடையே அதிவிரைவுச் சாலை அமைக்கப்படும் என்றும், அந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் 2 மணி நேரத்திலே பயணம் செய்யலாம் என்றும், இந்த சாலையின் பயன்பாடு வரும் ஜனவரி மாதம் செயல்பாட்டிற்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க 



  • Rajinikanth On Marimuthu: "மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்..” நடிகர் மாரிமுத்து மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்


இயக்குநரும் நடிகருமான ஜி. மாரிமுத்து இறப்பு தென் இந்திய திரையுலகப் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு தங்களது இறங்களைத் தெரிவித்து வர மாரிமுத்து பற்றிய பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.  இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. ‘பரியேறும் பெருமாள்’,  ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. மேலும் படிக்க 



  • RIP Marimuthu : ‘இந்தாம்மா ஏய்!' இனி எப்போ கேட்போம் இந்த குரலை.. வெற்றிடத்தை விட்டுச்சென்ற ஆதிகுணசேகரன்


சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்றவர் இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து. இவர் இன்று காலை சீரியலின் டப்பிங் பேசி கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கும் போது உயிரிழந்தார். அவரின் இந்த திடீர் இழப்பு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் படிக்க