என் மண் - என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கிய இந்த பயணம் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து. திடீர் ஓய்விற்கு பின் மீண்டும் துவங்கியது. இந்நிலையில் நேற்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபயணத்தை துவங்கினார்., கொங்கப்பட்டியில் துவங்கி உசிலம்பட்டி முருகன் கோவில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபயணம் மேற்கொண்டார்.,  வழி நெடுகிலும் பா.ஜ.க தொண்டர்களும், பொதுமக்களும் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.,




தொடர்ந்து உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ”சரித்திரம் வாய்ந்த உசிலம்பட்டி மண்ணில் பேச வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. நாட்டார் வழிபாட்டு மக்கள் இந்த மக்கள், இங்கு உள்ள எட்டு நாட்டில் வசிக்கும் மக்கள் ஆண்டவனுக்கும், சத்தியத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். உலகை ஆண்ட ஆங்கிலேயர்கள் வரியை கொடுத்து வாழ்ந்தது இந்த மக்களிடம் மட்டுமே, இந்த குல தெய்வ வழிபாட்டு முறையை, சனாதன முறையை வேரறுக்க ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. அந்த கூட்டத்தை பார்த்து நீங்கள் எப்படி மௌனமாக இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.




மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேனியில் பாராளுமன்ற உறுப்பினராக பாஜகவைச் சேர்ந்தவர் வரும் போது பி.கே.மூக்கையாத்தேவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அருகே நேதாஜிக்கு சிலை வைப்போம் என பேசினார். சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத மக்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்கிறோம், ஆங்கிலேயர்கள் போய்விட்டார்கள் அதற்கு பதிலாக திமுகவினர் வந்துவிட்டார்கள் எனவும், முளைச்சு மூணு இலை விடல.. அவர் நடித்த எந்த படமும் ஓடல, அவர் அப்பா-வின் காசில் கொழுத்து போய் திரியும் இவர் சனாதனத்தை ஒழிக்க போகிறாராம்., அவர் சொன்னார் கொசுவை ஒழிப்பது போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தமிழகத்தில் ஒழிக்க வேண்டியது டி - டெங்கு, எம் - மஸ்கிட்டோ, கே - கொசு என்ற திமுகவை தான், இந்த வீரம் விளைந்த உசிலம்பட்டி மண்ணில் ஒரு முறை கூட திமுக வென்றது இல்லை, உசிலம்பட்டி மக்கள் இவர்களை போன்றோரை உள்ளே விட மாட்டார்கள் அதே போன்று 2024 ல் தேர்தலும் திமுகவை ஒழித்துக் காட்ட வேண்டும் என்றும், தலைவர்கள் பெயரை சொல்ல வேண்டுமென்றால் அது ஐயா மோடி அவர்கள்தான், அந்த இடத்தில் ஸ்டாலின் எல்லாம் இல்லை” என பேசினார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வட்டி தொகை; 6 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு