TN Headlines Today: ஆவினில் அறிமுகமான புதிய பால்.. தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை.. சுடச்சுட தலைப்புச்செய்திகள்...!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை கீழே காணலாம்.
- பெண்களை அதிகளவில் பணியமர்த்தும் நிறுவனங்களை வரவேற்கிறது தமிழ்நாடு- முதலமைச்சர் ஸ்டாலின்
ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்துடன் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. தொடர்ந்து உரையாற்றிய அவர், பெண்களை அதிகளவில் பணியமர்த்தும் நிறுவனங்களை தமிழக அரசு வரவேற்பதாக தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தில் ரூ. 1891 கோடி முதலீடு செய்யப்படும் என்றும், இந்த புதிய தொழிற்சாலை மூலம் 2004 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் எனவும் கூறினார். மேலும் படிக்க
- ஆவினில் இன்று முதல் செறிவூட்டப்பட்ட பசும் பால் விநியோகம் தொடக்கம்
வைட்டமின் ஏ மற்றும் டி சேர்த்து செறிவூட்டப்பட்ட பசும் பால் ஆவினில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த பாலானது நோய் எதிர்ப்பு சக்தியை வைட்டமின் ஏ மற்றும் டி அதிகரிப்பதுடன் கண் பார்வையை மேம்படுத்தி எலும்புகளை உறுதிப்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் செறிவூட்டம் செய்யப்பட்ட ஆவின் பசும் பால் வகையினை வாங்கி பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம்: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி!
12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி செல்வி ச. நந்தினி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 8.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் வாங்கி சாதனைப் படைத்தா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
-
சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை
சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ. ஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று மதுரை, தேனி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிl 8-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் தொடர்பில் உள்ளார்களா என விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
- “செந்தில் - கவுண்டமணிதான் ஓபிஎஸ் -டிடிவி” - கலாய்த்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனின் சந்திப்பு மற்றும் அவர்கள் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலாய்த்து பதிலளித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் டிடிவியின் சந்திப்பு என்பது நீண்ட நாட்களாக சந்திக்காமல் உள்ள கவுண்டமணி - செந்தில் திடீரென சந்திப்பதை போன்றது. அதனை நகைச்சுவையும், கோமாளித்தனமும் நிறைந்த சந்திப்பாக தான் தமிழகம் வியந்து பார்க்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க