TN Headlines Today:
மகளிர் உரிமைத் தொகை திட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. அந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான ஆட்சிக்கு வந்தால் தகுதியுள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தும் 2 ஆண்டுகளாக அத்திட்டம் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இதற்கு அப்போதிருந்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “நிதி பிரச்சினை” என விளக்கம் கொடுத்திருந்தார். மேலும் வாசிக்க..
இன்று முதல் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொதுமக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் நோக்கில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில் ”வெள்ளிக் கிழமை தேய்பிறை முகூர்த்தம், 5ம் தேதி சனிக்கிழமை மற்றும் 6ம் தேதி ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..
இன்று முதல் சேதமடைந்த பயிருக்கு இழப்பீட்டு தொகையை விவசாயிகள் பெறலாம்
சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு மீதமுள்ள இழப்பீட்டு தொகை இன்று வழங்கப்படும் என என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இழப்பீட்டு தொகையில் ஏற்கனவே ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.10 ஆயிரம் இன்று வழங்கப்படும் என என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 88 விவசாயிகளுக்கான காசோலைகள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறப்பு துணை ஆட்சியரை தொடர்பு கொண்டு இன்று காலை 10 மணி முதல் காசோலையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..
"சிறுபான்மையினர் என்றால் அதற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளது. அரசியலமைப்பில் இருந்து இந்த அந்தஸ்தை எடுத்துவிடலாமா ?" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வாசிக்க..
இந்தியாவில் நம்பர் 1 செஸ் வீரர்..
உலக செஸ் தரவரிசைப் பட்டியலில் விஸ்வ்நாதன் ஆனந்தைப் பின்னுக்குத் தள்ளி 9 வது இடம் பிடித்து தமிழ்நாடு வீரர் குகேஷ் சாதனை படைத்துள்ளார். செஸ் உலகக்கோப்பை 2023 தொடர் அஸர்பைஜான் நாட்டின் பாகுவில் நடைபெற்று வருகிறது. ஜூலை 30 ஆம் தேதி தொடங்கிய இத்தொடர் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 செஸ் வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இத்தொடரில் வெற்றிபெறும் முதல் மூன்று வீரர்கள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கேண்டிடேட்ஸ் டோர்னமெண்ட்டில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.மேலும் வாசிக்க..
40 டிகிரி செல்சியஸ் கொளுத்தும் வெயில்..
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 10-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க..