"சிறுபான்மையினர் என்றால் அதற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளது.  அரசியலமைப்பில்  இருந்து இந்த அந்தஸ்தை எடுத்துவிடலாமா ?" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 


என் மண் - என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கிய இந்த பயணத்தின் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மக்களிடம் மத்தியில் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தார்.


 






எங்கள் அருமை மோடிக்கு தெரியும். அண்ணாமலைக்கு தெரியாது, அண்ணாமலை just like என செல்லூர் ராஜூ பேசியுள்ளாரே !


யார் பேசினால், யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற தரம் இருக்கிறது.  சிலர் தன்னை அரசியல் விஞ்ஞானியாக நினைத்து கொண்டு பேசுகின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் மக்கள் நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். எங்களுக்கு எந்த தலைவர்களின் அப்ரூவலும் தேவையில்லை. மக்கள் அப்ரூவல் தான் தேவை, மக்கள் அன்பு தான் தேவை. எனவே அவர்களுக்கு பதில் சொல்லி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றார்.




சிறுபான்மையினர் என சொன்னால் செருப்பால் அடிப்பேன் என நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் சொல்கிறாரே ? 

 

தமிழ்நாட்டில் சிலர் அரசியல் புரிதல் இல்லாமல் பேசுகின்றனர். மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக  இருக்கின்றனர். அதே போல் இந்தியாவில் இந்துக்கள் பல மாநிலத்தில் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். இந்து மதத்திற்குள்ளேயே சிறுபான்மை, பெரும்பான்மை உள்ளது. சிலருக்கு இந்த சிந்தனை கிடையாது. தமிழகத்தில் நெடுங் காலமாக சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற அரசியல் நடந்து வருகிறது. எல்லோரும் மனிதர்கள் தான். எல்லோரும் சமம் தான். சிறுபான்மையினர் என்றால் சிறுமை என்றும், பெரும்பான்மை என்றால்  உயர்வும் என்று கிடையாது. எனவே இதில் புரிதல் இல்லாமல் பேசக்கூடாது. சிறுபான்மையினர் என்றால் அதற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளது.  அரசியலமைப்பில்  இருந்து இந்த அந்தஸ்தை எடுத்துவிடலாமா ?. இந்த சிறப்பு அந்தஸ்து உள்ளதால் தான் அவர்களால் கல்வி நிறுவனங்கள் சுயமாக இயக்க முடிகிறது. எனவே இந்த அந்தஸ்து இருக்க வேண்டும் என நினைக்கிறோம்” என்றார்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 


 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண