TN Headlines Today:


அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் அமலாக்கத்துறையில் சரண்டராக முடிவு 


அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் விரைவில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அசோக் குமாரின் வழக்கறிஞர் கூறியதாக வெளியாகியுள்ள தகவல், ”எந்த வழக்கிற்காக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர் என்பதை குற்றப்பத்திரிகையில் பார்த்த பின்னர்தான் சரண்டர் ஆவார் எனவும், மேலும், 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் அசோக் குமாருக்கு வழங்கப்பட்ட கெடு நிறைவு பெற்றுள்ளதாலும், அசோக் குமார் ஆஜரான பின், அவரிடம் விசாரணை நடத்திய பின்னர்தான்  செந்தில் பாலாஜிக்கு பிணை கிடைக்கும் சூழலில் ஆஜராகவுள்ளதாக” தெரிவித்துள்ளார்.மேலும் வாசிக்க..


ஆளுநர் தமிழிசை பயணித்த விமானம்.. பாஜகவை எதிர்த்து கோஷமிட்ட பெண்ணுக்கு எதிரான வழக்கு ரத்து


பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்ட பெண்ணுக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்துகொண்டிருந்த அன்றைய பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜனை நோக்கி அதே விமானத்தில் பயணம் செய்த சோஃபியா என்ற பெண், “ பாசிச பாஜக ஒழிக” என கோசமிட்டார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைதும் செய்யப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் அதாவது, இன்று ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை சோஃபியாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாசிக்க..


10,000 சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி


மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.15 ஆயிரம் கோடி சுழல்நிதி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திஷா ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் கூறியதாவது, மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மத்திய அரசுத் திட்டங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதை கவனிக்கும் ஊரக வளர்ச்சித்துறையின் திஷா (DISHA) குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்றது. மேலும் வாசிக்க..


நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் போராட்டம் சந்தர்ப்பவாதமானது - ஜெயக்குமார்


நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவினர் போராட தகுதியில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நீட் தேர்வை எதிர்த்து போராட திமுகவிற்கு என்ன தகுதி இருக்கின்றது. நீட்டை ரத்துசெய்ய மத்திய அரசுக்கு திமுக அரசு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. இது மக்களின் காதில் பூ சுத்துகின்ற வேலை. மக்களுக்கு அல்வா கொடுக்கின்ற வேலை. வருகின்ற 20-ஆம் தேதி நாங்கள் மாநாட்டை நடத்துவது மக்களுக்கு தெரியக்கூடாது என்று, அன்றைய தேதியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு ஆர்ப்பாட்டம் வைத்திருக்கிறார்கள்.மேலும் வாசிக்க.


தமிழ்நாட்டில் எத்தனை நாளுக்கு மழை? 


 தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 16.08.2023 மற்றும் 17.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் வாசிக்க..

 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் 

 

ஆடி அமாவாசை மற்றும் ஆடி மாதம் கடைசி செவ்வாய் கிழமை ஒட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அந்த வகையில் சக்தி தளத்தில் முதன்மையான விளங்கும் அருள்மிகு காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ஆடி அமாவாசை மற்றும்  ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை ஒட்டி தங்கத்தேரில் பவனி விழா நடைபெற்றது.மேலும் வாசிக்க..


அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று விசாரணை:


தமிழ்நாடு உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில்  அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த லோகநாதன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்மேலும் வாசிக்க..


நீட் தேர்வுக்கு எதிராக ஆகஸ்ட் 20 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்


இது தொடர்பான அறிக்கையில், “தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து - அவர்களின் உயிரைப்  பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தி.மு.கழக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்.மேலும் வாசிக்க..