தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

16.08.2023 மற்றும் 17.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

 

18.08.2023 முதல் 22.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

 

அதிகபட்ச வெப்பநிலை : 

 

16.08.2023 மற்றும் 17.08.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்;  ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும். 

 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

 

மேட்டுப்பட்டி (மதுரை) 6, பெரியபட்டி (மதுரை) 5, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), தென்பரநாடு (திருச்சி), MRC  நகர் ARG (சென்னை), பஞ்சப்பட்டி (கரூர்) தலா 3, விருகனூர் (மதுரை), மாயனூர் (கரூர்), மதுரை வடக்கு, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை நகரம், சிறுகமணி KVK (திருச்சி) தலா 2, ரெட்ஹில்ஸ் (திருவள்ளூர்), சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடம், ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மயிலம்பட்டி (கரூர்), கத்திவாக்கம் (சென்னை), கல்லிக்குடி (மதுரை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), பேரையூர் (மதுரை), மணலி (சென்னை),  நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

 

தென்மேற்கு பருவமழை பொறுத்தவரையிலும் இயல்பான மழை அளவை விட ஆறு சதவீதம் இந்த ஆண்டு அதிகமாக ஜூன் 1 தேதியிலிருந்து தற்போது வரை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை பொறுத்த வரையிலும் ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 153 மில்லிமீட்டர் மழை ஆகும். இது இயல்பை விட 6  சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என தெரிவித்தார். 

 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

 

17.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.