நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவினர் போராட தகுதியில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.


அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி மாற்றப்பட்டதிற்க்கு அமலாக்கத்துறை மற்றும் நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரம் அலுவலகத்தில் மாநாடு வாகனத்தை கொடியாசித்து துவங்கி வைத்தார் பின்னர் செய்தியாளிடம் பேசியவர், “இதுவரை எந்த கட்சியும் நடத்தாத வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. நீட் தேர்வு குறித்து போராட்டம் நடத்த எந்த முகாந்திரமும் தகுதியும் திமுகவிற்க்கு இல்லை.


இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிய போகிறது.அப்போது போராடாமல் இன்று போராடுவது என்ன என்பதை பார்க்கும்போது  திமுகவினர் சந்தர்ப்பவாதிகள் என்பது தமிழ்நாடு மக்களுக்கு நிச்சயம் தெரியும். திமுக ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி இருந்த போதுதான் நீட் தேர்வு மசோதாவை எடுத்து வந்தனர்.


திமுகவினர் விளம்பர தட்டி வைத்தால் வழக்கு போடுவது இல்லை. ஆனால், மாநாட்டுக்கு நாங்கள் பேனர் வைத்தால் வழக்கு போடுகிறார்கள். பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் அதிமுகவிடம் எடுபடாது. அதிமுக மாநாடு செய்திகள் இடம் பெறக் கூடாது என்பதற்காக அன்றைய தினமே போராட்டத்தை நடத்துகின்றனர்


நீட் தேர்வுக்கு விவகாரத்தில் போராட தகுதி இல்லாதவர் உதயநிதி ஸ்டாலின். தேநீர் விருந்து புறக்கணிப்பது ஒரு விஷயம் இல்லை. திருநாவுக்கரசு கூறுவது முற்றிலும் பொய் அவருக்கு அடையாளம் காட்டியது யார்
துணை சபாநாயகர் பதவி கொடுத்து அழகுப்பார்த்தது எம்.ஜி.ஆர். திருநாவுக்கரசின் அரசியல் வரலாற்றில் அடையாளம் காட்டியது அதிமுகதான்.


அதிமுகவின் வரலாற்றை கொண்டாடும் மாநாடு என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பில்லை. என்னை கேள்வி கேக்க உங்களுக்கு பாரம்பரியம் இருக்கிறதா?” என திருநாவுக்கரசு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.


தொடர்ந்து பேசிய அவர், “எங்களுகென்று பெரிய அரசியல் வரலாறு இருக்கிறது. நியாயமான கோரிக்கை வைக்கும் மீனவர்களை கைது செய்தது கண்டிக்கதக்கது. முதலமைச்சரை எத்தனை பேர்தான் ஏமாற்றுவார்கள் என தெரியவில்லை. கன்னியாகுமரியில் இருந்து நாகபட்டினம் வரை கடலில் காற்றாலை அமைத்தால் மீனவர்கள் எப்படி தொழில் செய்ய முடியும். ராமநாதபுரத்தில் திமுக நடத்தும் போராட்டத்தில் மீனவர்கள் யாரும் பங்கேற்க வில்லை. ஒரு புறம் கடலில் தலைவர்கள் சிலையும் காற்றாலையும் வைத்தால் மீனவர்கள் எப்படி தொழில் செய்ய முடியும். நாட்டில் உள்ள குறைகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் விமர்சித்தால் அதை சரி செய்ய முடியாமல் விமர்சிக்கிறார்கள்” என்றார்.