ஆடி மாதம் என்றாலே அம்மன் (Aadi month 2023) 

 

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயிலில் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் திருவிழாக்கள் கலை கட்டுவது வழக்கம். குறிப்பாக, ஆடி மாதத்தை பொறுத்தவரை சிறு தெய்வங்கள் வழிபாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஆடி மாதம், நிறைவடைய உள்ள நிலையில்,  பல்வேறு கோயில்களில் ஆடிப்பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.



 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ( kanchipuram kamakshi Amman temple )

 

ஆடி அமாவாசை மற்றும் ஆடி மாதம் கடைசி செவ்வாய் கிழமை ஒட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அந்த வகையில் சக்தி தளத்தில் முதன்மையான விளங்கும் அருள்மிகு காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ஆடி அமாவாசை மற்றும்  ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை ஒட்டி தங்கத்தேரில் பவனி விழா நடைபெற்றது.



 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் தங்கத்தேர் ( Golden chariot ) 

 

காமாட்சி அம்மன் லக்ஷ்மி சரஸ்வதியுடன் பச்சை நிற பட்டுடுத்தி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு ஆபரணங்கள் உடுத்தி நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து பின் கோயிலின் உட்பிரகாரத்தில் தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆடி அமாவாசை மற்றும் ஆடிமாத செவ்வாய் கிழமை ஒட்டி நடைபெற்ற சிறப்பு தங்க தேர் பவனியை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



 


காஞ்சி காமாட்சி வரலாறு ( kanchipuram kamakshi temple history ) 


காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான் என நம்பிக்கை நிலவுகிறது




அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள் என்பது நம்பிக்கை. பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது“ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார். அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள் என்பது நம்பிக்கை