• Governor Ravi On Neet: ”நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன்” - ஆளுநர் ரவி பளீர் பதில்


நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர் “நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை குறைத்து விடும். எனவே அது தொடர்பான மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன். நீட் தேர்வுக்கு கோச்சிங் செண்டர் சென்று பயில வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்தும்போது மாணவர்களை நிர் தேர்வுக்கு தயார் செய்யலாம். மேலும் படிக்க 



  • Minister Anbil Mahesh Poyyamozhi: அமைச்சர் அன்பில் மகேஸுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி- என்ன காரணம்?


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (ஆக.12) காலை சேலத்தில் நடைபெற்ற சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு பள்ளி செயல்பட அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.  மேலும் படிக்க



  • CM MK Stalin: ”வாட்ஸ்-அப் வரலாறு பேசும் நிர்மலா சீதாராமன்” ஜெயலலிதா விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நச் பதிலடி


ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதாக திமுக மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள் தொடர்பாக, திமுக எம்.பி. கனிமொழி பேசியிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவிற்கு திமுகவினர் இழைத்த கொடுமைகள் அனைவரும் அறிந்ததே. மேலும் படிக்க 



  • Aavin Cost Hike : ஆவின் பால் பாக்கெட் விலை அதிரடி உயர்வு.. திடீர் விலையேற்றம் ஏன்? ஆவின் நிர்வாகம் விளக்கம்..!


ஆவின் 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலை ரூ. 10 உயர்ந்து இன்றுமுதல் ரூ. 220க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ. 210க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்றுமுதல் ரூ. 10 உயர்த்தப்பட்டு ரூ. 220க்கு விற்பனையாகிறது. இந்த திடீர் விலையேற்றதால் டீக்கடை மற்றும் உணவகங்களில் டீ மற்றும் காபி போன்றவற்றின் விலை விரைவில் 2 ரூபாய் வரை உயரலாம் எனவும், பிங்க் நிறத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க 



  • கோவை வந்தடைந்தார் ராகுல் காந்தி.. விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பளித்த காங்கிரஸ் தொண்டர்கள்..!


நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவ்வுத்தரவு நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி இன்று முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு செல்ல உள்ளார். இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ராகுல்காந்தி வருகை தந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் படிக்க