- DMK - VCK Alliance: திமுக கூட்டணியில் விசிகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. எந்தெந்த தொகுதி?
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- TN Weather Update: உஷார்! 40 டிகிரி செல்சியஸை நெருங்கும் வெப்பநிலை! அசௌகரியம் ஏற்படும் என எச்சரிக்கை
இன்று முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
- இங்கிலாந்து பிரதமரின் மாமியார் சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்- பிரதமர் வாழ்த்து
பிரபல கல்வியாளரும் இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவியும் இங்கிலாந்து பிரதமரின் மாமியாருமான சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுதா மூர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் எனத் தற்போது அறியப்படும் சுதா மூர்த்தி, பொறியாளர், எழுத்தாளர், பேராசிரியர், சமூகத் தொண்டாற்றுபவர் என்று பல முகங்களை உடையவர். மேலும் படிக்க
- CBI Raid: உக்ரைனுக்கு எதிரான போர்! ரஷ்யாவிற்கு கடத்தப்படும் இந்திய இளைஞர்கள் - அதிர்ச்சியின் பின்னணி இதுதான்!
இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றவர்களும், வேலைக்காக சென்றவர்களும் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உக்ரைனுக்கு எதிராக போரில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த ஹமில் மங்கூக்யா என்ற வாலிபர் போரில் ட்ரோன் தாக்குதல் போது உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. மேலும் படிக்க
- Cylinder Price: மகளிர் தின ஜாக்பாட்.. சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு!
சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பெண்களுக்கு தங்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இப்படியான நிலையில் இந்த நாளை மேலும் சிறப்பாகும் வகையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக மகளிர் தின ஸ்பெஷல் அறிவிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க