விழுப்புரம்: எல்லா இடத்திலும் அரசியல் இருக்கும் எல்லாரும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள் அதனையும் கடந்து செல்ல வேண்டும் தான் கிரிக்கெட்டிலும் அரசியல் இருப்பதாக பொன் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்.

 

விழுப்புரம் நகர பகுதியான முத்தாம்பாளையத்தில் தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட டர்ப் விளையாட்டு மைதானத்தினை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பொன் அசோக் சிகாமணி கலந்து கொண்டு திறந்து வைத்து டர்ப் மைதானத்தில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ் நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, பல்வேறு மாவட்டங்களில் டர்ப் மைதானங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் நிறுவப்பட்டு வருவது போல் அரசு சார்பில் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படும் மினி ஸ்டேடியத்தில் டர்ப் மைதானங்கள் அமைக்கப்படும் என கூறினார். 

 

இந்திய கிரிக்கெட் அணிக்கு அவ்வப்போது வீரர்கள் தேர்வாகி கொண்டு தான் இருப்பதாகவும், தற்போது வாசிங்டன் சுந்தர் தேர்வாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், வேகப்பந்துவீச்சாளர் நடராஜ் நல்ல சிறப்பாக பந்து வீசிய தருணத்தில் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதாகவும், கிரிக்கெட் மட்டுமல்ல எல்லா இடத்திலும் அரசியல் இருக்கும் எல்லாரும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள் அதனையும் கடந்து செல்ல வேண்டும் தான் கிரிக்கெட்டிலும் அரசியல் இருப்பதாக பொன் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்.