- DMK Files 3: தி.மு.க. ஃபைல்ஸ் 3ம் பாகம் ரிலீஸ்! அண்ணாமலை வெளியிட்ட ஆடியோவில் இருப்பது என்ன?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் 3ஆம் பாகத்துக்கான ஆடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில், இத்துடன் இது முடியப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். மேலும் படிக்க
- DPIIT Award: தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு! விருது வென்று அசத்தல்! மற்ற மாநிலங்கள் எப்படி?
மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை, புத்தாக்க நிறுவனங்களுக்கு (இன்னோவேடிவ் எனப்படும் புதிய சிந்தனைகளின் அடிப்படையில்) உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. மேலும் படிக்க
- LIC share: முதன்முறை! ரூ.900 எட்டிய எல்.ஐ.சி. பங்கின் விலை - அதிக மதிப்புடைய பொதுத்துறை நிறுவனமாக அசத்தல்
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், பங்குச் சந்தையில் புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் பங்கின் விலை முதல் முறையாக 900 ரூபாயை தொட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் இருந்து பட்டியலிடப்பட்டதிலிருந்து, இதுவரை இல்லாத புதிய உச்சம் இதுவாகும். மேலும் படிக்க
- Praggnanandhaa: "ஆளப்போறான் தமிழன்" இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரானார் பிரக்ஞானந்தா!
இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வெறும் 18 வயதிலேயே நாட்டின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுவும் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி அவர் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளார். செஸ் போட்டிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படும் டாடா ஸ்டீல் செஸ் போட்டியில், நடப்பு உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம், இந்த வியக்கத்தக்க சாதனையை பிரக்ஞானந்தா செய்து முடித்துள்ளார். மேலும் படிக்க
- Governor RN Ravi: "ராமர் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார்” - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் கோயில் முன்புறமுள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் தரிசனம் செய்வதற்காக இன்று ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்துள்ளார். மேலும் படிக்க