DPIIT Award: 2022-ம் ஆண்டின் மாநிலங்களின் ஸ்டார்ட் அப் தரவரிசையில் 'சிறந்த செயல்திறன்' பிரிவில் தமிழ்நாடும் இடம் பெற்றுள்ளது.


சிறந்த மாநிலங்களுக்கான விருதுகள்:


மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை, புத்தாக்க நிறுவனங்களுக்கு (இன்னோவேடிவ் எனப்படும் புதிய சிந்தனைகளின் அடிப்படையில்) உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.


தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், சந்தைப்படுத்துதலை எளிமையாக்குதல், நிதி ஆதரவு திட்டங்கள் உள்பட 25 காரணிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மிகச் சிறந்த மாநிலங்கள், சிறந்த மாநிலங்கள், முதன்மை மாநிலங்கள், ஆர்வம் காட்டும் மாநிலங்கள், முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள் என வரிசைப்படுத்தப்பட்டு இந்த தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த மாநிலங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 5 பிரிவுகளில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் போட்டியிட்டன.


இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோவில்! தமிழ்நாட்டில் இருந்து சென்ற மரக்கதவுகள் - சுவாரசிய தகவல்கள் இதோ


தமிழ்நாடு 3வது இடம்:


டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தொழில் தொடங்க உகந்த மாநிலங்களுக்கான பட்டியலை வெளியிட்டார். அதில், மிகச்சிறந்த மாநிலங்களுக்கான விருதுபட்டியலில் தொடர்ந்து நான்காவது முறையாக, குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்கள், முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.


தமிழ்நாடு மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, நிதி ஆதரவு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய பிரிவுகளில் தமிழ்நாடு மாநிலம் முழுமையாக 100 மதிப்பெண்களை பெற்றுள்ளது. முதல்முறையாக இந்த விருதுகள் அறிமுகப்படுத்தியபோது, முதல் இரண்டு ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கடைசி இடம் வகிக்கிறது. அதேபிரிவில் 2021ம் ஆண்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. இந்நிலையில் தான், மிகச்சிறந்த மாநிலங்களுக்கான விருதுபட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.


இதையும் படிங்க: 21ம் தேதி ஸ்ரீரங்கம் வரும் பிரதமர் மோடி! இன்றே வீடு, வீடாக போலீசார் சோதனை!


மிகச் சிறந்த மாநிலங்கள்: குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம்


சிறந்த மாநிலங்கள்: மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, அருணாசல பிரதேசம், மேகாலயா


முதன்மை மாநிலங்கள்: ஆந்திரா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், திரிபுரா


ஆர்வம் காட்டும் மாநிலங்கள்: பீகார், அரியானா. அந்தமான் -நிகோபார் தீவுகள்,நாகாலாந்து


முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள்: சத்தீஸ்கர், டெல்லி. ஜம்மு-காஷ்மீர், சண்டிகர்,தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக்