ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் கோயில் முன்புறமுள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார்.

Continues below advertisement

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தனது மனைவியுடன்  தரிசனம் செய்வதற்காக இன்று ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு  வந்துள்ளார். அவருக்கு கோவில் சார்பாக பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவருக்கு அங்கு இருந்த பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர் மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், தாயார் சன்னதி வந்து தாயாரை வழிபட்டார். அதனை தொடர்ந்து

Continues below advertisement

கோவில் முன்புறமுள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் அவரும் அவரது மனைவியும் ஈடுபட்டனர். ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தார். ஆளுநரின் வருகையை ஒட்டி ஸ்ரீரங்கம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தாவது:

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ராமர் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு  மட்டுமல்ல பக்தர்களுக்கும்  பெரும்பங்கு உண்டு. தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோயில் மட்டுமல்ல பொது இடங்களிலும் தூய்மை  பேண வேண்டும் என தெரிவித்தார்.