ஆஃபர்களை அள்ளி வழங்கும் கோ-ஆப்டெக்ஸ்.. தீபாவளி ஷாப்பிங் இங்கதான்.. மாதாந்திர சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா ?
Chengalpattu Co - Optex Sale : கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், துவக்கி வைத்தார்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம்
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89- ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு பேருதவி அளித்து வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பாரம்பரியமிக்க பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை ஆகிய இடங்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பட்டுச்சேலைகளை கொள்முதல் செய்து, விற்பனை செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களின் பெரும் நன்மதிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இளம் தலைமுறையினர் விரும்பும் வண்ணம் காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்புள்ள மென்பட்டு சேலைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
30% தள்ளுபடி
பல்வேறு அரசு/தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்காக அவர்களின் நிறுவனத்திற்கே நேரிடையாக சென்று வளாக விற்பனையும் செய்து வருகிறது. மேலும், மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 11 மாத சந்தா தொகையை மட்டுமே செலுத்தி 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்துவதால், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 30% தள்ளுபடியை ஆண்டு முழுவதும் பெற்று கூடுதல் பலன் அடைவதுடன் வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் ஆர்வமுடன் சேர்ந்து பலனடைந்தும் வருகின்றனர்.
தீபாவளி 2024 பண்டிகைகால விற்பனை
தீபாவளி 2024 பண்டிகைகால விற்பனைக்காக கோ-ஆப்டெக்ஸ் பட்டு, பருத்தி இரகங்கள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், மகளிர் விரும்பும் சுடிதார் இரகங்கள், ஆர்கானிக் பருத்தி இரகங்கள் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஆகியவை விற்பனைக்காக பெருமளவு தருவிக்கப்பட்டுள்ளன. தற்போது தீபாவளி 2024 பண்டிகை கால விற்பனை 15.09.2024 முதல் 30.11.2024 வரை 30% தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி விற்பனையை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்கள்.
ஒரு கோடி ரூபாய் இலக்கு
செங்கல்பட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு தீபாவளி 2024 விற்பனை குறியீடாக ரூ 1.00 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட கோ-ஆப்டெக்ஸ் துணிகளை கொள்முதல் செய்து தீபாவளி பண்டிகையை சிறப்புடன் கொண்டாடிட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை முதுநிலை மண்டல மேலாளர் க.அருள்ராஜன், செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி, செங்கல்பட்டு விற்பனை நிலைய மேலாளர், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்
கோ- ஆப்டெக்ஸின் மாதாந்திர சேமிப்பு திட்டம் ரூபாய் 300, விருந்தே ஆரம்பமாகிறது . 11 மாதங்கள் சந்தா தொகையை நீங்கள் செலுத்தினால் , பன்னிரண்டாவது மாதம் சந்தா தொகையை கோ ஆப்டெக்ஸ் செலுத்தும் . அதேபோன்று 3000 ரூபாய் மாதம் கட்டி வந்தால், ஒரு வருடம் கழித்து 51, 429 பெறும் மதிப்புள்ள துணிகளை வாங்கிக் கொள்ள முடியும். 300 ரூபாய், 400 ஒரு ரூபாய், 500 ரூபாய், 600 ரூபாய், 700 ரூபாய் , 800 ரூபாய், 900 ரூபாய் , 1000, 1500, 2000, 2500,3000 ஆகிய தொகைகளில் மாத சந்தாஇருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 11 மாதங்கள் சந்தா தொகையை செலுத்தினால், பன்னிரண்டாவது மாது சந்தா தொகை நிறுவனம் சார்பில் செலுத்தப்படும் , அதன் பிறகு அதற்கு ஏற்றவாறு துணிகளை எடுத்துக் கொள்ளலாம்.