மேலும் அறிய

Shanmugasundaram Resign : ’தமிழக அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலகுகிறார் சண்முகசுந்தரம்’ முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க முடிவு..!

1995ம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான டான்சி நில அபகரிப்பு வழக்கில் ஆவணங்களை திரட்டிக்கொண்டிருந்த சண்முகசுந்தரம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து சிபிஐ விசாரணையை திமுக கோரியது

தமிழக அரசு தலைமை தலைமை வழக்கறிஞராக திமுக அரசு பொறுப்பேற்றதும் நியமிக்கப்பட்டவர் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம். இதற்கான உத்தரவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்தார். இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களால் தன்னுடைய பதவியிலிருந்து விலக சண்முகசுந்தரம் முடிவு எடுத்துள்ளார்.

Shanmugasundaram Resign :  ’தமிழக அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலகுகிறார் சண்முகசுந்தரம்’ முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க முடிவு..!
அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய சண்முகசுந்தரம், இங்கிலாந்து நீதிமன்றங்களிலும் பணியாற்றிய பழுத்த அனுபவம் மிக்கவர். அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த சண்முகசுந்தரம், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மிக நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தார். அதன்காரணமாகவே கலைஞர் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தின் 4ஆம் பாகத்தில் சண்முகசுந்தரம் குறித்தும் அவரது குடும்ப பாரம்பரியம் பற்றியும் எழுதியுள்ளார்.

அதேபோல், ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஜெயின் கமிஷனுக்கு உதவியாக சண்முகசுந்தரம் அரசு சார்பில் நியமிக்கப்பட்டவர். குறிப்பாக, முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி நில அபரிப்பு வழக்குகளில் அவருக்கு எதிராக முக்கியமான சட்ட பணிகளை ஆற்றியவர் சண்முகசுந்தரம்.Shanmugasundaram Resign :  ’தமிழக அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலகுகிறார் சண்முகசுந்தரம்’ முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க முடிவு..!

1995ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான டான்சி நில அபகரிப்பு வழக்கில் ஆவணங்களை திரட்டிக்கொண்டிருந்த சண்முகசுந்தரம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பின்னர் காப்பாற்றப்பட்டார்.- அதன்பிறகு, 2-6-1995 ல் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடப்படவேண்டும் என்று ஒரு தனித் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

Shanmugasundaram Resign :  ’தமிழக அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலகுகிறார் சண்முகசுந்தரம்’ முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க முடிவு..!
அதிமுக ஆட்சியில் தாக்கப்பட்ட சண்முகசுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது

கடந்த 2021ல் திமுக ஆட்சி அமைந்ததும் சண்முகசுந்தரத்தை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கவேண்டும் என்று முதல்வர் அளித்த பரிந்துரையின்படி, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவரை தமிழக அட்வகேட் ஜெனராலக நியமித்தார்.Shanmugasundaram Resign :  ’தமிழக அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலகுகிறார் சண்முகசுந்தரம்’ முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க முடிவு..!

இந்நிலையில், வயது முதிர்வு, வேலை பளு உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் தன்னுடைய தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ய சண்முகசுந்தரம் முடிவு எடுத்துள்ளாதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாகவே இது குறித்து யோசித்தவந்த சண்முகசுந்தரம், இன்றையை பேரவை முடிந்ததும் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கவுள்ளார்.அந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டு, தமிழக அரசின் பரிந்துரையின்படி, விரைவில் புதிய தலைமை வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget