மேலும் அறிய

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிர்ச்சி! மகிழுந்து வரிச்சலுகை ரத்து: அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்க அளிக்கப்பட்டு வந்த 10%  ஜி.எஸ்.டி சலுகை ரத்து செய்யப்பட்டது அநீதி - அன்புமணி இராமதாஸ்

மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்க அளிக்கப்பட்டு வந்த 10%  ஜி.எஸ்.டி சலுகை ரத்து செய்யப்பட்டது அநீதி, உடனடியாக மீண்டும் வழங்க ஆணையிட  வேண்டும் என பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

உணவுப் பொருள்கள் தொடங்கி வாகனங்கள் வரை  பெரும்பான்மையான பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதைக் காரணம் காட்டி மாற்றுத்திறனாளிகள் மகிழுந்து வாங்க  வழங்கப்பட்டு வந்த 10% வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தமளிக்கிறது.

ஜி.எஸ்.டி வரிச்சீர்திருத்தத்திற்கு முன்பாக அனைத்து மகிழுந்துகளுக்கும் 28% வரி வசூலிக்கப்பட்டு வந்தது. மாற்றுத்திறனாளிகள் மகிழுந்து வாங்கும் போது அவர்களுக்கு 10%  வரிச்சலுகை வழங்கப்பட்டு, 18%  மட்டுமே வரி வசூலிக்கப்பட்டு வந்தது.  இப்போது சிறிய மகிழுந்துகளுக்கான  ஜி.எஸ்.டி வரி 18% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய மகிழுந்துகளுக்கான வரி 40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு பிறகு மாற்றுத்திறனாளிகள்  வாங்கும் சிறிய மகிழுந்துகளுக்கான 10% வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பிரிவினருமே சிறிய மகிழுந்துகளுக்கு 18% வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல.

மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை அளிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களுக்கு 10% வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்தது. பொதுவாகவே மகிழுந்துகளுக்கான  வரிகள் குறைக்கப்பட்டதைக் காரணம் காட்டி  வரிச்சலுகையை ரத்து செய்வது அநீதியாகும். மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த இந்த  வரிச்சலுகை தான் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் மகிழுந்து வாங்குவதற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்த சலுகை நிறுத்தப்பட்டால்  அவர்கள் மகிழுந்து வாங்குவதற்கான வாய்ப்புகள் தடைபட்டு போய்விடும்.

எனவே,மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்க அளிக்கப்பட்டு வந்த 10%  ஜி.எஸ்.டி சலுகை ரத்து செய்யப்பட்டதை கைவிட வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு  6%  ஜி.எஸ்.டி விதிப்பில்  மகிழுந்து  கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

School Leave: விடாமல் பெய்யும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - எந்த மாவட்டம் தெரியுமா?
School Leave: விடாமல் பெய்யும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - எந்த மாவட்டம் தெரியுமா?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Rains: 29 மாவட்டங்கள்.. வெளுத்து வாங்கப்போகும் மழை - இதுதான் லிஸ்ட்!
TN Rains: 29 மாவட்டங்கள்.. வெளுத்து வாங்கப்போகும் மழை - இதுதான் லிஸ்ட்!
கரூரில் அழுததற்கு விமர்சனம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.. மனித உணர்வும் அறிவும் முக்கியம்!
கரூரில் அழுததற்கு விமர்சனம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.. மனித உணர்வும் அறிவும் முக்கியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் வரலாறு படைத்த சனே டகாய்ச்சி காத்திருக்கும் சவால்கள்..! | Japan New PM Sanae Takaichi
Selvaperunthagai Angry|அயோக்கிய பய..சாதி வெறிநான் தண்ணிய தொடக்கூடாதா?அதிகாரியை திட்டிய செ.பெருந்தகை
Vazhukku maram : கொட்டும் மழையில் சாகசம்வழுக்கு மரம் ஏறும் போட்டிமெய்சிலிர்க்க வைத்த வீரர்கள்
”சாதி இப்பவும் இருக்கு தான! மாரி செல்வராஜின் வலிகள்”துருவ் SUPPORT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Leave: விடாமல் பெய்யும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - எந்த மாவட்டம் தெரியுமா?
School Leave: விடாமல் பெய்யும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - எந்த மாவட்டம் தெரியுமா?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Rains: 29 மாவட்டங்கள்.. வெளுத்து வாங்கப்போகும் மழை - இதுதான் லிஸ்ட்!
TN Rains: 29 மாவட்டங்கள்.. வெளுத்து வாங்கப்போகும் மழை - இதுதான் லிஸ்ட்!
கரூரில் அழுததற்கு விமர்சனம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.. மனித உணர்வும் அறிவும் முக்கியம்!
கரூரில் அழுததற்கு விமர்சனம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.. மனித உணர்வும் அறிவும் முக்கியம்!
கழிப்பறை வசதி ; பயணியிடம் தனியார் பேருந்து மோசடி ! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
கழிப்பறை வசதி ; பயணியிடம் தனியார் பேருந்து மோசடி ! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
கோவை & திருப்பூர்: நாளை மின் தடை! உங்கள் பகுதிகளில் மின்சாரம் இருக்குமா? முக்கிய அறிவிப்பு!
கோவை & திருப்பூர்: நாளை மின் தடை! உங்கள் பகுதிகளில் மின்சாரம் இருக்குமா? முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: எல்லோரும் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
TNPSC Group 4: எல்லோரும் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Bigg Boss Tamil 9: கானா வினோத் முகத்தில் உதைக்கப்போன ஆதிரை! பிக்பாஸில் பரபரப்பு!
Bigg Boss Tamil 9: கானா வினோத் முகத்தில் உதைக்கப்போன ஆதிரை! பிக்பாஸில் பரபரப்பு!
Embed widget