பெரியாரை விமர்சித்த மிகப்பெரிய கூலிக்காரர் கலைஞர் – கனிமொழிக்கு பதிலடி கொடுத்த சீமான்
பெரியாரை விமர்சித்த மிகப்பெரிய கூலிக்காரர் கலைஞர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

பெரியாரை விமர்சித்த மிகப்பெரிய கூலிக்காரர் கலைஞர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெரியாரை திமுக தலைவர்கள் அண்ணா, கருணாநிதியை விட யாரும் அதிகம் விமர்சித்தது இல்லை. பெரியாரை விமர்சித்த மிகப்பெரிய கூலிக்காரர் கலைஞர். கனிமொழி கூலிக்காரர் என சொன்னது அவரது அப்பா கருணாநிதியையும் அவரது கட்சியின் தோற்றுநர் அண்ணாவையும் சொல்கிறார். பெரியார் பேசியதைதான் நான் எடுத்து பேசுகிறேன். பெரியார் யார் என்று பேசுகிறீர்கள். பெரியார் என்ன பேசினார் என்று கேட்டால் சொல்லமாட்டேங்குறீர்கள். நீங்கள் உங்கள் அப்பாவைதான் கூலி என்று சொல்கிறீர்கள் கனிமொழி. நீங்கள் பெரியாரிஸ்ட்டா? உங்கள் மறுமகன் நெற்றியில் திருநீர் பூசினீர்களா இல்லையா? நீங்கள் கடவுள் மறுப்பாளர் என்று சொன்னால் ஏற்க வேண்டுமா? உங்கள் கட்சி சமூக நீதி, பெண்ணுரிமை பேசலாமா? பெரியார் எங்கு சாதி ஒழிப்பை நிறைவேற்றிவிட்டார்? இத்தனை தொகுதிகள் இருக்கும்போது தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிட்டது ஏன்? காரணம் சொல்ல முடியுமா? சாதிக்காக அங்கு போய் நிற்கிறீர்கள். அந்த பாவப்பட்ட மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கனிமொழி நாடார் என்றால் அழகிரி, ஸ்டாலின் எல்லாம் என்ன? ஒரு அப்பாவுக்கு இரண்டு சாதி இருக்குமா? தூத்துக்குடியில் இரண்டு முறை எம்.பி ஆகிருக்கீங்க. அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு என்ன நடவடிக்கை எடுத்து நீதியை நிலை நாட்டியுள்ளீர்கள். குரல்வளையில் சுட்டவன் நிலை என்ன? கொடநாடு கொலை வழக்கில் நடவடிக்கை என்ன? பொள்ளாச்சி வழக்கில் நீதி நிலைநாட்டுவோம் என்று சொன்னீர்களே? என்ன நாட்டிருக்கிறீர்கள்” என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “மக்கள் குடியிருக்க இல்லாத இடம் கோயிலுக்கு எதற்கு? இதை எடுத்து என்ன பண்ணப் போறீங்க? இந்த இடத்துக்கு வாடகை கேட்குறீங்க. இந்த வாடகையை வைத்து என்ன வருவாயை பெருக்க போறீங்க. ஏழை எளிய மக்களிடம் வாடகை வாங்காமல் இருப்பதும் நல்லது செய்வதுதான்.
ஏழை மக்களின் கண்ணீர் எவ்வளவு பெரிய கோட்டையையும் சரித்துவிடும். உலகத்திலேயே வலிமையானது ஏழை மக்களின் கண்ணீர். இது கொடுமை. இந்த மக்கள் அவர்கள் வாழும் இடத்திலேயே பட்டா கொடுங்கள். மின் இணைப்பு கொடுங்கள். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளீர்கள்.
அன்னை தெராசா நகர், மாயவரம், கரூர் எல்லா இடத்துலேயும் இதே நிலைதான் தொடர்கிறது. ஆக்கிரமிப்பு என்று நீங்கள் எப்படி சொல்வீர்கள். குப்பை கொட்ட பயன்படுத்தலாம். எளிய மக்கள் பயன்படுத்தக்கூடாதா?” என கேள்வி எழுப்பினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

