மேலும் அறிய

VB-G RAM G scheme : மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?

VB-G RAM G scheme in Tamil Nadu : மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை முந்தைய திமுக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், வி பி ஜிராம் ஜி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு திட்டங்கள்- எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின்

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. குறிப்பாக மும்மொழி கொள்கை திட்டம். பிஎம் ஸ்ரீ திட்டம், வேளாண் சட்டங்கள்,நீட் தேர்வு, மின்சாரத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அந்த வகையில் மற்றோரு முக்கியமான திட்டம் தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு, புதிய பெயர் மற்றும் புதிய நிபந்தனைகளோடு கொண்டு வந்த வி பி ஜிராம் ஜி ராம் திட்டம். இந்த திட்டத்தை திமுக ஆட்சியில் இருந்த போது கடுமையாக எதிர்த்தது. குறிப்பாக இந்த திட்டமானது ஏழைத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் செயல் என்று குற்றம் சாட்டினார்.

வி பி ஜிராம் ஜி ராம் திட்டம் - திமுக எதிர்ப்பு- தவெக ஆதரவு

இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 100-ல் இருந்து 60 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி, இதற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத திட்டம் (VB-G RAM G) மசோதாவிற்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிதாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது. இந்த நிலையில், வி பி ஜிராம் ஜி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட விபி ஜி ராம் ஜி திட்டம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய  அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு 95 ஆயிரம் கோடி ரூபாயை இடைக்கால நிதியாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு 7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தவெக அரசு ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபி ஜி ராம் ஜி திட்டத்தை ஏற்க காரணம் என்ன.?

தற்போது தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக உள்ள காரணத்தால் நிதி தேவையை கருத்தில் கொண்டும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பதை அடிப்படையாக க் கொண்டும் வி பி ஜி ராம்ஜி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விபி ஜி ராம் ஜி திட்டத்தின் படி, ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் (யூனியன் பிரதேசங்கள் உட்பட) 60:40 என்ற விகிதத்தில் நிதி சுமையை ஏற்க வேண்டும்.  புதிய சட்டத்தின்படி வேலை நாட்கள் 100-இல் இருந்து 125 ஆக அதிகரிக்கப்பட்டாலும் மாநிலத்தின் நிதிச்சுமை அதிகரிக்கும் என்றும் முடிவெடுக்கும் அதிகாரம் மையப்படுத்தப்படும் என்று தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
" என் புருஷனை விடு , இல்லைனா ரயில் முன்னாடி விழுவேன் " ரயில் நிலையத்தில் பரபரத்த வடமாநில பெண்
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு... ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரடி கலந்தாய்வு: எங்கு தெரியுமா?
மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு... ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரடி கலந்தாய்வு: எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Embed widget