Ramanathapuram holiday: ராமநாதபுரத்தில் ஜனவரி 6-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு...
திரு உத்தர கோசமங்கை கோயில் திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் ஜனவரி 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள திரு உத்தர கோசமங்கை கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு , ராமநாதபுரத்தில் ஜனவரி 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தர கோசமங்கை கோயில்
திரு உத்தர கோசமங்கை கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தர கோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இங்கு அமைந்துள்ள நடராசர் சிலையானது மரகத்தால் ஆனது. நடராசர் ஆண்டு முழுவதும் சந்தன காப்பில் காட்சியளிக்கிறார். வருடத்தில் ஒரு நாள் மட்டும் மரகத்தில் காட்சியளிப்பார்.
மரகத்தில் காட்சியளிக்கும் தினத்தன்று ஆருத்ரா தரிசன விழா,ராமநாதபுரத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
விடுமுறை:
இந்நிலையில், திருவிழாவையொட்டி, வரும் ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 21 தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
View this post on Instagram