PTR : ஜிஎஸ்டிக்கு முதல் எதிரியாக இருந்தவர் இன்றைய பிரதமர் மோடிதான் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
அரசியல் என்று பார்த்தால் ஜிஎஸ்டிக்கு முதல் எதிரியாக இருந்தவர் இன்றைய பிரதமர் மோடி அவர்கள்தான் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அரசியல் என்று பார்த்தால் ஜிஎஸ்டிக்கு முதல் எதிரியாக இருந்தவர் இன்றைய பிரதமர் மோடி அவர்கள்தான் என்றும், ஜிஎஸ்டி வரி அமலாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்பார்க்கப்பட்ட வரியும், வளர்ச்சியும் வரவில்லை என்றும் சட்டபேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் நேற்று. வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மாணியக் கோரிக்கைமீது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், இன்றும் சட்டபேரவை விவாதம் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்தநிலையில், காலை 10 மணி முதல் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் குறித்த விவாதங்களை முன் வைத்தனர். அதற்கும் அமைச்சர்கள் விரிவான தகவலை அளித்து வந்தனர். இதையடுத்து, ஜிஎஸ்டி குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு, இதுகுறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்பொழுது, அரசியல் என்று பார்த்தால் ஜிஎஸ்டிக்கு முதல் எதிரியாக இருந்தவர் இன்றைய பிரதமர் மோடி அவர்கள்தான். இந்த வரி கொண்டுவரப்பட்டபோது இரண்டு குறை இருந்தது.
முதல் குறை :
மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரிக்களுக்கான உரிமைகள் பறிக்கப்படும்.
இரண்டாவது குறை :
ஜிஎஸ்டி வரியை அவரச அவரசமாக செயல்படுத்துவதால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்த அச்சம் இருந்தது.
ஜிஎஸ்டி வரி அமலாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்பார்க்கப்பட்ட வரியும், வளர்ச்சியும் வரவில்லை. அந்த வரியை ஒருமை படுத்தியதால் வரக்கூடிய வரியும் வரவில்லை. மாநிலங்கள் எல்லாம் தனித்தனி சேல்ஸ் வரி இருந்தபோது அதிக வரியை பெற்று வந்தது. ஒரே நாடு, ஒரே வரியை கொண்டு வந்தபோது, மாநிலங்களிடையே 11. 4 சதவீதமாக குறைந்துள்ளது.
அதேபோல், ஜிஎஸ்டி உருவானபோது மத்திய அரசாங்கம், முந்திய ஆண்டுக்கு இந்த ஆண்டு போதிய வருமானம் வரவில்லை என்றால் ஜிஎஸ்டி செஸ் என்ற முறையில் தீட்டி அதில் வரும் நிதியை வைத்து சமம் செய்யப்படும் என்று தெரிவித்தது. ஆனால், அது சில மாநிலங்களில் சில ஆண்டுகளில் தேவை இல்லாமல் போனது.
ஒரு சில மாநிலங்களில் இந்த ஜிஎஸ்டி செஸ் 2, 3 ஆண்டுகளில் தேவையானதாக மாறிவிட்டது. எப்போது, மாநிலங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததோ (குறிப்பாக 2004 முதல் 2016) வரையில் சேல்ஸ் வரி 16 சதவீதம் வரை வளர்ந்தது.
ஜிஎஸ்டி வந்ததற்கு பிறகு இது முற்றிலும் வளரவில்லை. தொடர்ந்து அனைத்து மாநிலங்களும், ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களும் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில், இழப்பீடு 5 வருடங்கள் இல்லாமல் அதற்கு மேல் இருக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி குறித்து ஒரு கமிட்டி உருவாக்கி 6 மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தது. 10 மாதங்கள் ஆகியும் இன்னும் ஒரு கூட்டம் கூட கூடவில்லை என்று தெரிவித்து உரையை முடித்து கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்