மேலும் அறிய

OPS Statement: யானை பசிக்கு சோளப்பொறியா? தேர்தல் வாக்குறுதியில் இருப்பது போல முதியோர் உதவித்தொகையை உயர்த்துக - ஓ.பி.எஸ்.

தேர்தல் வாக்குறுதிப்படி சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியத்தை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிப்படி சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியத்தை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

யானைப் பசிக்கு சோளப்பொறியா?

”தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், "தமிழகத்தில் தற்போது அரசு உதவித் தொகை பெற்று வரும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், ஆதரவற்ற மகளிர், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத 50 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள், அகதிகளாகத் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் உட்பட 32 இலட்சம் பேருக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை 1000 ரூபாய் என்பது 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்." என்று அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 26 மாதங்கள் கடந்த நிலையில், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை 1,200 ரூபாயாக உயர்த்தியுள்ளது "யானைப் பசிக்கு சோளப்பொறி" என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

ஓய்வூதிய உயர்வு:

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துவிட்டு மவுனமாக இருந்துவிட்டது. இதே முறையைத்தான் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதிய உயர்விலும் தி.மு.க. அரசு கடைபிடித்து இருக்கிறது.

அதுவும் ஆட்சிப் பொறுப்பேற்று 26 மாதங்களுக்குப் பிறகு இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலே 32 இலட்சம் பயனாளிகள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2023-2024 ஆம் ஆண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரியைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, ஒன்பது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் 34,62,034 பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில், தற்போதைய உயர்வின்மூலம் 30 இலட்சம் பேர் பயனடைவார்கள் என்று தி.மு.க. அரசு கூறியுள்ளது. இதன்படி பார்த்தால், பயனாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கரை இலட்சம் குறைந்துள்ளது.  தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்திருக்க வேண்டும். எது எப்படியோ, அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் உதவித் தொகை பெற்றுவரும் அனைவருக்கும் இந்த உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது பயனாளிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

1500 ரூபாய்

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும் ஒன்பது திட்டங்களில், கிட்டத்தட்ட 20 இலட்சம் பேர் பயன்பெறக்கூடிய இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய கைம்பெண்கள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றிற்கு மத்திய அரசின் பங்கும் இருப்பதால், அதிக அளவு நிதிச்சுமை ஏற்படாது என்பதைக் கருத்தில் கொண்டு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை 1,500 ரூபாயாக உயர்த்தி தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்று  முதலமைச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது விஷப் பரீட்சையா ? பிரவீன் சக்கரவர்த்தி பதில்
முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது விஷப் பரீட்சையா ? பிரவீன் சக்கரவர்த்தி பதில்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
Embed widget