மேலும் அறிய

காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை

காதலித்துத் திருமணம் செய்த மகளின் வீட்டின் மீது தந்தை பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுருளை கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதுடைய முத்துக்குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளியான 60 வயதுடைய முருகன் என்பவருடைய 18 வயதுடைய மகள் வித்யா என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த வந்திருக்கிறார். வித்யா கல்லூரி படித்து வந்த நிலையில் முத்துக்குமாரும் வித்யாவையும் அடிக்கடி வெளியில் சுற்றி தெரிந்ததாக சொல்லப்படுகிறது.

இதன் மூலம் வித்யாவின் காதலை அறிந்த தந்தை முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் தங்கள் காதலில் உறுதியாக இருந்த இருவரும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த (மே 20) ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

பெட்ரோல் குண்டை வீசிய தந்தை

திருமணத்திற்கு பிறகு முத்துக்குமாரின் குடும்பத்துடன் சேர்ந்து சுருளை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தனர். மேலும் தனக்கென தனியாக முத்துக் குமார் தனது கிராமத்தில் மற்றொரு இடத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.

இந்நிலையில் முத்துக்குமாரும், அவரது மனைவி வித்யாவும் தங்களது புதிய கட்டுமானப் பணிகளைப் பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட வித்யாவின் தந்தை முருகன், ஆத்திரத்துடன் முத்துக்குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்த அவர், தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் வீட்டின் கதவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி

வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, அதற்குள்ளாக பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதில் வீடு தீப்பற்றி எரியத் தொடங்கியது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் , உடனடியாக தண்ணீரை ஊற்றி வீட்டின் தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே, அங்கிருந்து தப்பியோட முயன்ற முருகனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இச்சம்பவம் குறித்து மூலைக்கரைப்பட்டி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொது மக்களிடம் இருந்து முருகனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகனை முறைப்படி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

நாளைய பிரதமரே.. கொம்பு சீவும் அமைச்சர்கள்... கடிவாளம் போடுவாரா முதலமைச்சர் விஜய்?
நாளைய பிரதமரே.. கொம்பு சீவும் அமைச்சர்கள்... கடிவாளம் போடுவாரா முதலமைச்சர் விஜய்?
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
கோ-ஆப்டெக்ஸ் மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்; வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்
கோ-ஆப்டெக்ஸ் மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்; வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Embed widget