மேலும் அறிய
Advertisement
தருமபுரியில் இன்று பாதியாக குறைந்த பூக்கள் விலை; விவசாயிகள் ஏமாற்றம்
பூக்களின் விலை கடுமையாக, விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் பூ வியாபாரிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
ஆயுத பூஜையையொட்டி, தருமபுரியில் பூக்களின் விலை நேற்றைய விலை விட இன்று பாதியாக விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மாரண்டஹள்ளி பகுதி சுற்றி 30 கி.மீ. தொலைவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாமந்தி பூ சாகுபடி செய்து வருகின்றனர். ஏப்ரல் மாதம் சாகுபடிப் பணிகளைத் தொடங்கும் விவசாயிகள், செப்டம்பர் மாதத்தில் பூக்களை அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்த பூக்களை தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்படும் பூ சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில், கோவை, திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், தருமபுரி, வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் சாமந்திப் பூக்களை கொள்முதல்வ்செய்வது வழக்கம் ஆனால் தற்போது பூக்களின் விளைச்சல் அதிகரிப்பால் பூக்களின் விலை கடுமையாக சர்வை கண்டுள்ளது.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சரஸ்வதி, ஆயுத பூஜைக்காக வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வழிபாட்டுக்காக பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும். தருமபுரி பூக்கள் சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.160 முதல் ரூ.200-க்கு விற்கப்பட்ட சாமந்தி, இன்று தரத்திற்கு ஏற்ப ரூ.60- முதல் 20 வரை விற்பனையாகிறது. அதேபோல, ரூ.60 முதல் ரூ.40-க்கு விற்பனையான செண்டு மல்லி தற்போது ரூ.20-க்கும், ரூ.170 முதல் ரூ.180 வரை விற்பனையான சம்பங்கி இன்று ரூ.100-க்கும், ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று விற்கப்பட்ட சன்னமல்லி ரூ.600 முதல் 500 வரை விற்பனை செய்யப்பட்டது இன்று-ரூ 400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் குண்டு மல்லி இன்று 400 ரூபாய்க்கும் காக்கடா 240 ரூபாய்க்கு அரளி 350 ரூபாயில் இருந்து 200 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று பன்னீர் ரோஸ் 200 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது இன்று 100 முதல் 80 ரூபாயாக குறைந்து விலை குறைந்துள்ளது. திருமண மாலைகளுக்கு பயன்படுத்தும் தாஜ்மஹால் ரோஸ் 20 பூ கொண்ட கட்டு 500 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் இன்று பூக்கள் சந்தைக்கு கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
திருவண்ணாமலை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion