Ma Subramanian: அலட்சியம் வேண்டாம்; கொரோனா விதிகளை பின்பற்றுங்கள் - மக்களுக்கு மா.சுப்பிரமணியன் அட்வைஸ்
கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்றின் உருமாறிய வைரஸ் வகையான ஒமைக்ரான் B.F.7 சீனா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, "கோயம்பேடு, வணிக வளாகங்கள், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் தாங்களாக முன்வந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.
திரையரங்குகள், கோயில்கள் போன்ற மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் பின்பற்றி நடப்பது நல்லது. மக்கள் சூழலை அலட்சியப்படுத்தாமல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.