மேலும் அறிய

ஆஹா! மாநில அரசியலுக்கு வருகிறாரா கனிமொழி? அவரே சொன்ன பதில்.. சம்பவம் இருக்கு!

மாநில அரசியலுக்குத் திரும்புவது மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு, அதனை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சரவை தான் முடிவு செய்யும் என்று கனிமொழி பதிலளித்தார்.

மாநில அரசியலுக்கு வருவது குறித்து கட்சி முடிவு செய்யும் என மாணவர்களின் கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, சவாலான நேரத்தில் கட்சி தலைமை ஏற்று தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார் ஸ்டாலின். 2019 மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தல் என அனைத்திலும் மெகா வெற்றி பெற்றிருக்கிறது திமுக. 

ஸ்டாலினை தொடர்ந்து அவரது மகன் உதயநிதிக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதிதான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாநில அரசியலுக்கு வருவது குறித்து கட்சி முடிவு செய்யும் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

சென்னை மைலாப்பூரில் நேற்று மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் அரசியல் நுழைவு, வாரிசு அரசியல், திராவிட மடல், இந்தித் திணிப்பு, சாதி மறுப்பு திருமணம், ஆணவக் கொலை, சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். 

குறிப்பாக அரசியல் நுழைவுக் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கருணாநிதி கைது நிகழ்வு அனைத்துமே புதிதாக இருந்ததாகவும் காவலர்களுடன் தான் ஒரு சாதாரண கேள்வி எழுப்பியபோது, அதனையும் குற்றமாக எதிர்கொண்ட தருணத்தை நினைவு கூர்ந்தார்,

"அந்த அசாதாரண தருணத்திலும் கருணாநிதி எளிதாகப் பயமின்றி, தெளிவாக ஒரு போராளியாக எதிர்கொண்டார். அதுவே எனது அரசியல் நுழைவு" என்றார்.

குடும்ப அரசியல் என்ற கேள்விக்கு, முதலமைச்சர் ஸ்டாலினின் நீண்ட அரசியல், அவசரக் காலச் சிறைவாசம், பல்வேறு பதவிகளில் மக்கள் சேவையில் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டுப் பதிலளித்தார்.

கடைசியாக மாநில அரசியலுக்குத் திரும்புவது மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு, அதனை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சரவை தான் முடிவு செய்யும் என்று பதிலளித்தார்.

கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2019ஆம் ஆண்டு, முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அதே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு 2ஆவது முறையாக மக்களவை எம்பி-ஆனார்.

தொடர்ந்து தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் கனிமொழிக்கு சமீபத்தில்தான் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. மாநில அரசியலில் தனது மகன் உதயநிதிக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே கனிமொழியை தேசிய அரசியலில் ஸ்டாலின் ஈடுபடுத்தி வருவதாக பேசப்பட்டு வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget