மேலும் அறிய

‛தொடர்பில் இருக்காங்க... 2 பாஜக எம்எல்ஏக்களைத் தூக்கிடுவோம்...’- திமுக எம்.பி. பதிவிட்ட பரபர ட்வீட்!

சென்னை தியாகராயநகரில் உள தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு நேற்று வந்த சூர்யா சிவா, பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பேசினார்.

பாஜக எம்.எல்.ஏ. இரண்டு பேர் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், தலைமை இசைவு தெரிவித்தால் தூக்கிவிடுவோம் என்றும் திமுக எம்பி செந்தில்குமார் ட்வீட் செய்துள்ளார்

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை நேற்று நேரில் சந்தித்த சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார்.

அங்கீகாரம் வேண்டும்..

சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு நேற்று வந்த சூர்யா சிவா, பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கினார் அண்ணாமலை. பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய சூர்யா சிவா, ''தமிழகத்தில் பாஜக வெற்றிபெறும் கட்சியாக வளர்ந்து வருகிறது. அதனால் நான் பாஜகவின் இணைந்தேன். திமுகவில் எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.அதேபோல் குடும்ப ரீதியாகவும் எனக்கு சிக்கல்கள் உள்ளன. எனவே உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் சேர்ந்துள்ளேன். திமுகவின் உட்கட்சி கடுமையாக உள்ளது. என் தந்தையே என்னை அங்கீகரிக்கவில்லை. அண்ணாமலை என்ன ஏற்றுக்கொண்டார். விரைவில் திமுகவே பாஜக பக்கம் வரும்” என்றார்.

இந்நிலையில் ஒரு முக்கிய எம்பியான திருச்சி சிவாவின் மகனே பாஜகவில் இணைந்தது குறித்து பாஜக கட்சியினர் கடுமையான பதிவுகளின் மூலம் திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்பி ட்வீட் செய்துள்ளார்

செந்தில்குமார் ட்வீட்..

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள செந்தில்குமார், ''திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது தமிழகத்தில் வானதி சீனிவாசன், சரஸ்வதி, நயினார் நாகேந்திரன், காந்தி ஆகிய 4 பேர் மட்டுமே பாஜக எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இந்த 4 பேரில் யாரைக்குறிப்பிட்டார் எம்பி செந்தில் என இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
திருமாவளவன் மீது அதிருப்தியா? - விசிகவில் இருந்து பனையூர் பாபு ஏன் விலகினார்? - முழுப் பின்னணி
திருமாவளவன் மீது அதிருப்தியா? - விசிகவில் இருந்து பனையூர் பாபு ஏன் விலகினார்? - முழுப் பின்னணி
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Udumalpet Power Cut (25-05-2026): உடுமலைப்பேட்டையில் நாளை மின் தடை! எங்கெல்லாம் பவர் கட் - வெளியானது லிஸ்ட்
Udumalpet Power Cut (25-05-2026): உடுமலைப்பேட்டையில் நாளை மின் தடை! எங்கெல்லாம் பவர் கட் - வெளியானது லிஸ்ட்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
Minister Keerthana : வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
DMK ADMK ED: லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
DMK Cong: ”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
Embed widget