மேலும் அறிய

Water Contamination: குடிநீரில் கழிவுநீர் கலக்கலையா? அமைச்சர் குடித்துப் பார்ப்பாரா? அண்ணாமலை கேள்வி

Chennai Water Contamination: குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?- அண்ணாமலை.

சென்னை, பல்லாவரம் அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் அமைச்சர் குடிநீரைக் குடித்துப் பார்ப்பாரா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டு, 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், மூன்று பேர் உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக நலம்பெற வேண்டும் கொள்கிறேன்.

திமிராகப் பதிலளித்த அமைச்சர் அன்பரசன்

இது குறித்துக் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களிடம், குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். ஆனால் 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் மீதுதான் தவறு இருக்கிறது என்று திமிராகப் பதிலளித்துள்ளார் அமைச்சர் அன்பரசன்.

குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?

குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா? அதுமட்டுமின்றி, தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 - 13 தான் என்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

எங்கும் ஊழல், எதிலும் ஊழல்

ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் ரூ.55க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற ஊடக சகோதரரின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை.

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால், அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது’’.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
எல்லோருக்கும் எல்லாம் - பெரியார் விழாவில் திமுகவின் கொள்கையை நினைவு படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
TN Rains: மீண்டும் மீண்டுமா! 20ம் தேதி உருவாகிறது புதிய புயல்? டெல்டா வெதர்மேன் ரிப்போர்ட்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
விசிக கொடி கம்ப விவகாரம்; இரவு நேரத்திலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
Sanjeev Goenka on Dhoni : ”தோனி ஒரு சிறந்த தலைவர்!”  திடீரென புகழ்ந்து தள்ளிய சஞ்சீவ் கோயங்கா...
Sanjeev Goenka on Dhoni : ”தோனி ஒரு சிறந்த தலைவர்!” திடீரென புகழ்ந்து தள்ளிய சஞ்சீவ் கோயங்கா...
Bengaluru Suicide Case: மனைவி, மாமியார் தந்த மன உளைச்சல்! தூக்கில் தொங்கிய ஐடி ஊழியர் - வேதனை
Bengaluru Suicide Case: மனைவி, மாமியார் தந்த மன உளைச்சல்! தூக்கில் தொங்கிய ஐடி ஊழியர் - வேதனை
School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?
School Leave: ஸ்டூடண்ட்ஸ்! வெளுக்கும் மழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு - எத்தனை மாவட்டத்திற்கு?
கல்யாணம் பண்ணிக்கச் சொல்லும் சாமுண்டீஸ்வரி! கண்டிஷன் போடும் ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
கல்யாணம் பண்ணிக்கச் சொல்லும் சாமுண்டீஸ்வரி! கண்டிஷன் போடும் ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget