நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தது நாட்டையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண்சிங் மட்டுமே படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.


அவர் மீட்கப்பட்டபோது மீட்பு பணியில் இருந்தவர்கள் இதுதொடர்பாக கூறியதாவது, “நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோது, ஹெலிகாப்டரில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. மூன்று அதிகாரிகள் மிகவும் ஆபத்தான நிலையில் பலத்த தீக்காயங்களுடன் வெளியில் இருந்தனர். அவர்களை முதலில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். அவர்களில் ஒருவர்தான் வருண்சிங். தீக்காயங்கள் பலமாக இருந்தாலும், அவர் சுயநினைவுடன்தான் இருந்தார்.




'என் முகத்திலும், உடலிலும் உள்ள முட்களை எடுத்துவிட முடியுமா? என்று கேட்டார். நாங்கள் முட்களை எடுத்தபிறகு, எங்களை மீட்க வந்திருக்கிறீர்களா? என்று ஆங்கிலத்தில் கேட்டார். நாங்களும் இன்னும் சில நிமிடங்களில் உங்களை பத்திரமாக மருத்துவமனையில் அனுமதித்துவிடுவோம். தைரியமாக இருங்கள் என்று கூறினோம்.


அதற்கு ஆவர் ஆங்கிலத்தில் “Carry on… தேங்க்ஸ்” என்று கூறினார். பின்னர், அவரை மருத்துவமனையில் மீட்டு அனுமதித்துவிட்டோம். முடிந்தவரை  அனைவரையும் காப்பாற்றிவிட நினைத்தோம். ஆனால், அது முடியவில்லை என்பது மிகுந்த வேதனையாக உள்ளது. எங்களால் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. வருண்சிங்காவது மீண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே பிரார்த்தனை.” என்றனர்.




வருண்சிங்கை மீட்கும் பணியில் உள்ளூர் பொதுமக்களும் உதவி புரிந்துள்ளனர். அவர்கள் “அந்த நிலையிலும் கூட அவர் (வருண்சிங்) எங்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றார். அவர் எப்படியாவது குணமாகி வர வேண்டும். அவர் குணமாகி வந்த பிறகு எங்கிருந்தாலும் அவரைச் சென்று பார்ப்போம்” என்றனர்.


தற்போது, பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் உயர்சிகிச்சைக்காக வருண்சிங் அனுமதிக்கப்பட்டார். 80 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள வருண்சிங்கிற்கு மூன்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும்  படிக்க..


CDS Chopper Crash | ‛எனக்கு டவுட் இருக்கு... சுப்ரீம் கோர்ட் விசாரிக்கணும்’ -ஹெலிகாப்டர் விபத்து குறித்து சு.சாமி., பகீர்!


Next CDS of India: நாட்டின் அடுத்த தலைமைத் தளபதி யார்? - நீடிக்கும் குழப்பம்!


Mi-17 Black Box: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு...


“ஒரு மருத்துவராக... சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை சந்தித்தேன்” - ஆளுநர் தமிழிசை பேட்டி!


Coonoor Chopper Crash | சௌர்யா சக்ரா விருதிலிருந்து ககன்யான் திட்டம்வரை... யார் இந்த கேப்டன் வருண் சிங்?



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண