Breaking News LIVE: பீகார் முதல்வர் - மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்

Breaking News LIVE Updates: இன்றைய நாளின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..

ABP NADU Last Updated: 10 Aug 2022 02:09 PM
மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்

பீகார் முதலமைச்சராக 8வது முறையாக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்

Priyanka Gandhi Tests Covid Positive : காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்திக்கு உறுதியானது கொரோனா தொற்று..

Priyanka Gandhi Tests Covid Positive : காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்திக்கு உறுதியானது கொரோனா தொற்று..





புதுச்சேரி- சட்டபேரவை

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு மக்கள் நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்றாதது, வேலைவாய்ப்பின்மை, மின்துறை தனியார் மயம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து திமுக - காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு.

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கம்..!

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் உரையுடன் தொடங்குகிறது. 

போதைப்பொருளை தடுக்க இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..!

தமிழ்நாட்டில் போதைப்பொருளை தடுப்பதற்கான நடவடிக்கை குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூர்ரம் நடைப்பெற இருக்கிறது. 

அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் விசாரணை..!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

உலகளவில் 59.08 கோடி பேருக்கு கொரோனா..!

உலகளவில் இதுவரை 59.08 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதில் 56. 27 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இந்த கொடிய தொற்றால் 64.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

ஈரோட்டில் விசைதறியாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்..!

ஈரோட்டில் விசைதறி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். 

81 வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் இன்று 81வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றாமில்லாமல் விற்கப்பட்டு வருகிறது. 

Background

பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளதலைவர் நிதீஷ் குமார் இன்று பதவியேற்கிறார். ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்பட 7 கட்சிகளின் ஆதரவுடன் பீகாரில் நிதீஷ் புதிய கூட்டணி ஆட்சியின் பதவியேற்க இருக்கிறார். 


ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பீகார் முதலமைச்சராக 8 வது முறையாக பதவியேற்று கொள்கிறார் நிதீஷ்குமார். இதுகுறித்து நிதீஷ் குமார் தெரிவிக்கையில், "எங்களுக்கு ஏழு கட்சிகளின் ஆதரவு உள்ளது. ஆதரவு கடிதத்தில் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர். மொத்தம் இரண்டு சுயேச்சைகள் உட்பட 164 எம்.எல்.ஏ.க்கள் புதிய அரசுக்கு ஆதரவளிக்க உள்ளனர்.


 நிதீஷ் குமார், ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரும் போது, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி முன்னணி பிரதிநிதிகள் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்தனர். 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், ஆர்ஜேடி தற்போது 79 எம்எல்ஏக்களுடன் தனிப் பெரிய கட்சியாக உள்ளது. JD(U) 45 சட்டமன்ற உறுப்பினர்களையும், காங்கிரஸ் 19 மற்றும் CPI(ML) தலைமையிலான இடது முன்னணி 17 சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.


புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிதீஷ் குமார் தனது கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை கூட்டிய சில மணி நேரங்களிலேயே பீகார் அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. “ பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டது காவி கூட்டணி மரியாதை கொடுக்கவில்லை, சதி செய்கிறது என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


ராஜ் பவனுக்கு வெளியே நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற ஜேடி(யு) கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒருமித்த கருத்துடன் உள்ளனர் என்றும் தெரிவித்தனர். 


நேற்று முந்தினம், தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பாட்னாவில் இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.


இந்த அரசியல் நெருக்கடியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆர்.சி.பி. சிங், சனிக்கிழமை மாலை நிதிஷ் குமாரின் கட்சியை விட்டு வெளியேறினார். மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்து வந்தார். ஆனால், அவரை அமித் ஷாவின் பினாமியாகவே நிதிஷ் குமார் பார்த்து வந்தார். 


ஊழல் செய்ததாக சிங் மீது அவரது சொந்த கட்சியே விமர்சனம் மேற்கொண்டிருந்தது. சமீபத்தில்தான், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்க ஐக்கிய ஜனதா தளம் மறுத்திருந்தது. இதன் காரணமாக, மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.