மேலும் அறிய

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து பாதியாக குறைந்தது...

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 308 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து 3 ஆயிரத்து 403 கன அடியாக குறைந்துள்ளது.

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.51 அடியாக உள்ளது, வினாடிக்கு 6 ஆயிரத்து 308 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து 3 ஆயிரத்து 403 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 41.47 டி.எம்.சி ஆக குறைந்தது.  குறுவை சாகுபடிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து பாதியாக குறைந்தது...

கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை குறைந்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நீர்வரத்து குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கே.ஆர்.எஸ், கபினி அணையிலிருந்து 10,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று 114.92 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 882 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5,260 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரியில் உபரி நீர் வினாடிக்கு 34 ஆயிரம் கன அடி தண்ணீர் கடந்த 24 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று கிருஷ்ண சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ண சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 25ஆம் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 308 கன அடியாக வந்து கொண்டிருந்த இந்நிலையில் இன்று 3 ஆயிரத்து 403 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் அணையிலிருந்து வினாடிக்கு 34 ஆயிரத்து  கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் மேலும் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து பாதியாக குறைந்தது...

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.49 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 42.44 டி.எம்.சி ஆக அதிகரித்துள்ளது. அணையின் நீர்வரத்து 6 ஆயிரத்து 690 கன அடியிலிருந்து 6 ஆயிரத்து 308 கன அடியாக குறைந்திருந்தது. 

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து பாதியாக குறைந்தது...

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டால் அணையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி விவசாயத்திற்கு பயன்படும். கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்து குறைந்து வருவதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் , திருவாரூர் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை , சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget