மேலும் அறிய

Sasikala on ADMK : ‘திமுகவுடன் கைக்கோர்த்ததால் தான் இந்த நிலை’ அதிமுக பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை..!

'தனக்கு தானே தலைவராக அறிவித்துக்கொண்டவர்கள், திமுகவினரோடு இந்த தேர்தலில் கைகோர்த்து நின்றதால்தான் இன்றைக்கு இந்த முடிவு மக்களால் எடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை மறந்து விடாதீர்கள்'

திமுகவுடன் கோர்த்து துரோகம் செய்ததால்தான் இன்று அதிமுக 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டு, ஆட்சியை பிடிக்க முடியாமல் தனித்து விடப்பட்டுள்ளது என்று சசிகலா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

சசிகலா அறிக்கையில் சொன்னது என்ன?

அதில், ”புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நிலையில் இன்றைக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு முற்றிலும் தோல்வியடைந்து இருப்பதற்கு யார் காரணம் என்று சற்று சிந்தித்து பாருங்கள். இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக எத்தனையோ கழகத்தொண்டர்கள், எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தவர்கள் எல்லாம் இன்றைக்கு விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றனர்.

நான் சொன்னதை கேட்க தவறினர்

இயக்கத்தின் நிர்வாகிகள் தனிமனித விருப்பு வெறுப்புகளை மறந்து தொண்டர்களின் நிலைமையை உணர வேண்டும். சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று, இயக்கம் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால், யார் காதிலும் விழவில்லை. இறுதியில் வேறு வழியில்லாமல் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட வேண்டியதாயிற்று. இந்த முடிவு கூட தமிழக மக்களின் நலன் கருதிதான் எடுக்கப்பட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விடக்கூடாது என்று தான் தனியாக களம் காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இன்றைக்கு என்ன மாதிரியான விளைவு ஏற்பட்டுள்ளது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

திமுக மீதான வெறுப்பில் அதிமுக ஆட்சி அமைத்திருக்க முடியும்

திமுக மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புதான் இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு முடிவினை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லியும் வந்தேன். இதில் மறைந்துள்ள உண்மை என்னவென்றால், இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் பெற்று இருக்க முடியும். அதற்கான சூழ்நிலை இருந்த நிலையில் தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும் இன்றைக்கு புரட்சித்தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்த துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

துரோகம், திமுகவுடன் கைகோர்த்தால் முடிவு

தனக்கு தானே தலைவராக அறிவித்துக்கொண்டவர்கள், திமுகவினரோடு இந்த தேர்தலில் கைகோர்த்து நின்றதால்தான் இன்றைக்கு இந்த முடிவு மக்களால் எடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை மறந்து விடாதீர்கள்.

இதனை இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களே தற்போது வெளிப்படுத்தியிருப்பது கழகத்தொண்டர்கள் அனைவருக்கும் மிகவும் வேதனையளிக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் இதுவரை செய்த தவறுகளை உணர்ந்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் இயக்கத்திற்கும்,கழகத்தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்மை அளிக்கும் விதமாக இருக்கும்.“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதை இனியாவது ஏற்றுக்கொள்ளுங்கள். “ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!” என அந்த அறிக்கையில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
த.வெ.க., ஆட்சியில் இனி லஞ்சம் வாங்கவோ ,கை நீட்டவோ பயப்படனும் - கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சு !
Jana Nayagan: எச்.வினோத் கேள்விக்கு
Jana Nayagan: எச்.வினோத் கேள்விக்கு "பதில் சொல்லுங்கள் ஃப்ராடுகளே.." கரூர் விவகாரத்தில் தவெக கேள்வி!
NEET: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; நாளை தாக்கல் செய்யப்பட உள்ள சட்டத்திருத்த மசோதா - என்ன இருக்கிறது?
NEET: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; நாளை தாக்கல் செய்யப்பட உள்ள சட்டத்திருத்த மசோதா - என்ன இருக்கிறது?
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget