அதிமுக உட்கட்சித் தேர்தல் - வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..
முன்னாள் உறுப்பினர்களான கே.சி.பழனிசாமி, உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் உறுப்பினர்களான வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிசாமி, மகன் சுரேன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பையும், தேர்தல் அலுவலர்கள் பற்றிய விபரங்களையும் அதிமுக ஒருங்கிணைப்பார் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தனர்.
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிhttps://t.co/wupaoCQKa2 | #AIADMK #MadrasHighcourt #Highcourt #TNPolitics pic.twitter.com/LdXf61C8lG
— ABP Nadu (@abpnadu) April 26, 2022
அதனை அடுத்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், ஒற்றை தலைமை வேண்டும் என்ற அதிமுக நிறுவனர், உறுப்பினர்களின் நோக்கத்துக்கு எதிராக விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் செயல்படுவதாகவும் மனூவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை என்றும், அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதை ரத்து செய்யவும் கே.சி. பழனிசாமி மனுவில் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதிமுக கட்சியில் ஒரு புறம் உட்கட்சித் தேர்தல் தொடர்பான செய்திகள் வெளியாக, மறுபுறம் விரைவில் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா கூறியுள்ளார்.
சமீபத்த்தில் தமிழ்நாடு முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான சசிகலா. நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன் என வி.கே.சசிகலா சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும், பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிச்சயம் விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Breaking News LIVE: 6 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட அனுமதி
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்