மேலும் அறிய

10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரமுடியாது - சுஷில்குமார் மோடி

10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரமுடியாது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷில்குமார் மோடி என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரமுடியாது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷில்குமார் மோடி என தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று நிதி மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதில், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷில்குமார் மோடி பேசியபோது, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுகிறது. ஆனால், ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவதை எந்த மாநிலமும் விரும்பவில்லை. பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. மாநிலங்களுக்கு மட்டும் மொத்தம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதை விட்டுக்கொடுத்தால், வேறு எந்தவகையில் வருமானம் கிடைக்கும்?

பெட்ரோலிய பொருட்கள் மீது 60 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 என்றால், மத்திய அரசுக்கு 35 ரூபாயும், அந்தந்த மாநில அரசுக்கு 25 ரூபாயும் கிடைக்கிறது. மத்திய அரசுக்கு கிடைக்கும் 35 ரூபாயிலும் மாநில அரசுகளுக்கு 42% தொகை அளிக்கப்படுகிறது.

ஆனால், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால், அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரிவிகிதமான 28 சதவீதம்தான் விதிக்க முடியும். அதாவது, லிட்டருக்கு 60 ரூபாய்க்கு பதிலாக 14 ரூபாய்தான் வரியாக வசூலிக்க முடியும். இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை வேற்உ எதைக்கொண்டு ஈடுசெய்ய முடியும்? ஆகவே, எதிர்வரும் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட வாய்ப்பே இல்லை. பெட்ரோலிய பொருட்கள் வரி மூலம் கிடைக்கும் வருவாய், அரசின் கஜானாவுக்குச் செல்வதாக சிலர் சொல்கிறார்கள். அப்படியானால், மின்சாரம், வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் போன்றவற்றை வழங்குவதற்கு அரசுக்கு எங்கிருந்து வருவாய் கிடைக்கும்? ஜி.எஸ்.டி.யை ‘கப்பர்சிங் வரி’ என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநிலமும் இந்த வரி நடைமுறையை எதிர்க்கவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்குத்தான் இதை அமல்படுத்தும் துணிச்சல் இருக்கிறது என்று அவர் கூறினார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை பேருந்தில் ஸ்பைடர் மேன் மாணவன்: ஆபத்தான பயணம், வைரல் வீடியோ!
மதுரை பேருந்தில் ஸ்பைடர் மேன் மாணவன்: ஆபத்தான பயணம், வைரல் வீடியோ!
"திருமணத்தை மீறிய உறவால் ஆத்திரம்" வாலிபரை சரமாரியாக குத்திக் கொன்ற பெண்ணின் தந்தை
மதுரை நீதிமன்றத்தில் தப்பிய கஞ்சா குற்றவாளி ராஜா: திண்டுக்கல்லில் அதிரடி கைது!
மதுரை நீதிமன்றத்தில் தப்பிய கஞ்சா குற்றவாளி ராஜா: திண்டுக்கல்லில் அதிரடி கைது!
"நடத்தை சரியில்லை" என நண்பர்கள் சொன்னதால் விபரீதம் - 24 வயது இளம்பெண்ணை வெட்டிச் சாய்த்த கணவன்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
Embed widget