மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கான அடிக்கல்லை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

அடிக்கல் நாட்டு விழா 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அக்காட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கட்டட பணி குழு தலைவர் வரதராஜன், பொருளாளர் வக்கீல் சுந்தரய்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார். 

Giorgia Meloni: டரம்ப், மோடி ஜனநாயக விரோதிகளா.? இத்தாலி பிரதமர் நெத்தியடி பதில்...

கலந்து கொண்ட பிரமுகர்கள் 

மாநில கட்டுப்பாட்டு குழு பழனிசாமி கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் சீர்காழி பன்னீர்செல்வம், மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா.எம் முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  

Ind vs Pak : சர்ப்ரைஸ் எங்க சார்? பாகிஸ்தான அணி பயிற்சியாளரை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..

செய்தியாளர்கள் சந்திப்பு 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில்; மாவட்ட குழு கட்டிடம் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். ஒன்றிய அரசு சர்வாதிகார அரசாக செயல்பட முயற்சிக்கிறது, இது ஜனநாயகத்திற்கு ஆபத்து. மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது. அதற்குரிய தமிழகத்திற்கான நிதியை தர மறுப்பதால் மூன்று மாதங்களாக பயனாளிகளுக்கு ஊதியம் வழங்கப்படாததால் விவசாய தொழிலாளர்கள் பட்டினி கிடக்கின்றனர். 

Dharmapuri DMK : “புறவாசல் வழியாக வந்தால் மாவட்ட செயலாளர் பதவியா?” பொங்கி எழுந்த திமுக நிர்வாகி..!

மீண்டும் இந்திக்கு எதிராக போராட்டம் 

இயற்கை பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் போது தமிழகத்திற்கு மறுப்பதும், கல்விக்குரிய 2512 கோடி வழங்க தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் வழங்குவோம் என நிபந்தனை விதிப்பதும், ஜனநாயக நாட்டில் நடைபெறும் செயல் அல்ல. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 1937 , 1965 -ஆம் ஆண்டுகளில் ஹிந்தி திணிப்பை தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக எதிர்த்து நின்றது. மீண்டும் அப்படி ஒரு போராட்டத்தை நடத்த நிர்பந்தம் நெருக்கடியை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

Mahakumbh: புண்ணியத்துக்கு மட்டுமா? பாவத்துக்கும் கும்பமேளா - மனைவியை காணவில்லை என நாடகம் - அம்பலமான கொலை

ஒன்றிய அரசு நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்

ஒன்றிய கல்வி அமைச்சர் கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் என்கிறார். மாநில அரசு மற்றும் மக்கள் அரசியல் ஆக்கவில்லை, அரசியல் ஆக்கியது ஒன்றிய கல்வி அமைச்சர் தான். நிதி வேண்டுமானால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும், மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டும் என்பது தான் அரசியல். தமிழ்நாட்டில் அரசு அரசியல் செய்வதாக பழி சுமத்தி அவர் தப்பிக்க முயற்சி செய்கிறார், அது வெற்றி பெறாது. ஒன்றிய அரசு நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என தெரிவித்தார்.