மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வஃக்ப் வாரிய சொத்துக்களை ஒன்றிய அரசு அபகரிக்க பார்க்கிறது என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெண்கள் மதரஸா திறப்பு விழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட A R.சாதிக் தீனியாத் பெண்கள் மதரஸா திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பளராக புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜான் ரீசெட் மற்றும் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும் வக்ஃபு வாரிய தலைவருமான நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
எம்பி நவாஸ் கனி
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும், வக்ஃபு வாரிய தலைவருமான நவாஸ் கனி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் கடந்த காலங்களில் மொழிக்கான போராட்டங்களை தமிழகம் எப்படி நடத்தியது என்பதை ஒன்றிய அரசுக்கு தெரியுமா? தெரியாதா? தமிழகத்தில் இரு மொழி கொள்கை இருந்து வருகிறது. தமிழ், ஆங்கிலம் மொழியினை கற்று வருகின்றனர்.
எந்த மொழியில் கற்பதற்கு எதிர்ப்பு கிடையாது
இங்கு எந்த மொழியில் கற்பதற்கு எதிர்ப்பு கிடையாது. ஆனால், மொழி திணிப்பை ஏற்க முடியாது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மாநில அரசுக்கு கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுப்பேன் என சொல்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இது தொடர்பாக மாநில கல்வித்துறை அமைச்சார் டெல்லியில் உள்ள மத்திய கல்வி அமைச்சரை பார்க சென்றபோது புதிய கல்வி கொள்கை திட்டத்தில் கையெப்பம் இட்டால் மட்டுமே நிதி வழங்கமுடியும் என கூறுவது மிகப்பெரிய ஆணவப்போக்கு, இதனை ஒன்றிய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
“என்னை வெறுத்தார்கள்.. அதற்கு காரணம் இதுதான்” - கண் கலங்கி பேசிய நடிகை மும்தாஜ்
சிறுபான்மையினர் கல்வி கற்பதை தடுத்து நிறுத்த முயற்சி
தமிழகம் மற்ற மாநிலங்களை விட அதிகமான வரி செலுத்தக்கூடிய நிலையில், நியாயமாக கிடைக்கக்கூடிய பணத்தை கொடுக்காமல் மற்ற மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கிறது. சிறுபாண்மையினரின் கல்வி கற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறது. பல்வேறு உதவி தொகையை தடுத்து நிறுத்தக்கூடிய அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
அண்ணாமலைக்கு சவால் விட்ட எம்எல்ஏ ஷாநவாஸ்... எதற்காக தெரியுமா..?
வஃக்ப் சொத்துக்களை அபகரிக்க திட்டம்
சிறுபான்மையினரை பொருளாதார ரீதியாக ஒடுக்க வேண்டும் என்பதற்காக வஃக்ப் திருத்த மசோதாவை கொண்டுவந்துள்ளது. வஃக்ப் வாரியத்திற்கு இவளவு பெரிய சொத்துக்களை சட்டரிதியாக அபகரிக்க வேண்டும் என திருத்த மசோதாவை கொண்டுவந்துள்ளனர். வஃக்ப் வாரிய தலைவர் பதவிக்கு இஸ்லாமியர் அல்லாதவர்களை கொண்டுவர இந்த அரசு பார்க்கிறது” என்றார்.