Giorgia Meloni: டரம்ப், மோடி ஜனநாயக விரோதிகளா.? இத்தாலி பிரதமர் நெத்தியடி பதில்...

ட்ரம்ப், மோடி போன்ற தலைவர்கள் மீது இடதுசாரிகள் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

Continues below advertisement

உலகளவில், ட்ரம்ப், மோடி போன்ற வலதுசாரி சித்தாந்தம் கொண்ட தலைவர்கள் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துள்ள நிலையில், அவர்கள் குறித்து இடதுசாரிகளால் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாகவும், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி விமர்சித்துள்ளார்.

Continues below advertisement

உலகம் முழுவதும் கோலோச்சிவரும் வாதுசாரி தலைவர்கள்

சமீப காலமாக, உலகெங்கிலும் வலதுசாரி சிந்தனை கொண்ட தலைவர்கள் பல்வேறு நாடுகளில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துவருகின்றனர். வலதுசாரி சித்தாந்தம் கொண்ட தலைவர்களான, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்டோரை பிரதமர்களாகவும், அதிபர்களாகவும் மக்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர். இவர்களது தலைமை குறித்து, பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக இத்தாலி பிரதமர் மெலோனி குற்றம்சாட்டியுள்ளார்.

இடதுசாரிகளுக்கு மெலோனி நெத்தியடி பதில்.?

உலகின் பல்வேறு பகுதிகளில் வலதுசாரி தலைமை அமைந்துள்ளது குறித்த இடதுசாரிகளின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள இத்தாலி பிரதமர் ஜியோஜியா மெலோனி, இடதுசாரிகள் திட்டமிட்டு பொய்களை பரப்பிவருவதாகவும், அவர்களை இனியும் உலகம் நம்பாது என கூறியுள்ளார். உலகெங்கிலும் வலதுசாரிகள் ஒரு நெட்வொர்க்கை உருவாக்குவதாகவும், அதனால் பிரச்னை ஏற்படும் என்று கூறிவரும் இடதுசாரிகள், இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக, மெலோனி குற்றம்சாட்டியுள்ளார்.

விஷிங்டனில் நடந்த பழமைவாத அரசியல் நடவடிக்கை குறித்த மாநாடு ஒன்றில், இணையம் வாயிலாக வீடியோ காலில் பேசிய அவர், மோடி, ட்ரம்ப், ஜேவியர் மிலே போன்றோர், ஒரு புதிய உலகளாவிய பழமைவாத இயக்கத்தை வடிவமைத்து வருவதாகவும், இது இடதுசாரிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

90-களில், பில் கிளிண்டன், டோனி பிளேயர் போன்றோர், உலகளாவிய இடதுசாரி தாராளவாத நெட்வொர்க்கை உருவாக்கியபோது, அவர்கள் அரசியல்வாதிகள் என்று அழைக்கப்பட்டதாகவும், ஆனால், இன்று அது குறித்து மோடி, ட்ரம்ப், ஜேவியர், மெலோனி போன்றோர் பேசும்போது, அவர்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று அழைக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். மேலும், இவ்வாறு இடதுசாரிகள் கூறுவது, அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாகவும், மக்கள் இனியும் அவர்களது பொய்யை நம்ப மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola