மத்திய, மாநில அரசுகள் வணிக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வணிகர் சங்கங்களின் தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்ரமராஜா நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:


BAPS Hindu Temple: "பல மதங்களின் ஒற்றுமையில் உருவான கோவில்" : அபுதாபி கோவில் குறித்த பிரத்யேக பதிவு!




வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 41 -வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வணிகர்களுக்கான பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, தனி நபர்களுக்கு, சங்கிலித் தொடர் விற்பனைக்கு என தனித்தனி விலை நிர்ணயம் செய்யப்படுவதை உற்பத்தியாளர்கள் கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.


BJP Donations: பாஜகவுக்கு நன்கொடைகளை வாரி வழங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்!




வரவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் எங்களிடம் கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளோம். அவ்வாறு கொடுக்கும் கட்சிக்கு எங்களது ஆதரவு இருக்கும். தமிழகத்தில் சாமான்ய வணிகர்களை வீழ்த்துவதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளன. எனவே மத்திய, மாநில அரசுகள் சிறப்புச் சட்டம் நிறைவேற்றி வணிகர்கள், வணிகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற முக்கிய தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.


Shocking Video: நடுரோட்டில் சங்கிலி கட்டி இழுத்துச் செல்லப்பட்ட பெண்.. எங்கே? கொடுமையை பாருங்க!




இந்த மாநாடு மூலம் பல்வேறு கோரிக்கைகள், அழுத்தங்களையும் மத்திய மாதம் அரசுக்கு தரவுள்ளோம்.  தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தொடர்பாக வியாபாரிகளை அச்சுறுத்தும் வகையில் அவர்களை கைது செய்வது, கடைகளுக்கு சீல் வைப்பது என்ற அதிகாரிகளின் நடவடிக்கையை ஏற்க முடியாது. அதிகாரிகள் உற்பத்தியாளர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அதே சமயம் வியாபாரிகளும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றார்.


Metro Pink Squad: மெட்ரோ ரயிலில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த பிங் ஸ்குவாடு.. அப்படின்னா என்ன?