சீர்காழியில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 65 சவரன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிய மூன்று பேர் கைது செய்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி இரணியன் நகரை சேர்ந்தவர் 53 வயதான சேகர். இவர் சீர்காழி அரசு மருத்துவமனை சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சேகர் வீட்டில் கடந்த பிப்ரவரி 10 -ம் தேதி கடைக்கு வந்து விட்ட நிலையில், அவரது மனைவி ரேணுகா வீட்டில் சமையலை முடித்துவிட்டு மதியம் 12:30 மணிக்கு கடைக்கு வந்துள்ளார்.


Karthigai Deepam :கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்.. தீபாவுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்




மனைவியை கடை பார்த்துக்கொள்ள கூறிவிட்டு, சேகர் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் கேட் உடைக்கப்பட்டு, கதவு கள்ள சாவி கொண்டு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சேகர், தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது பூஜை அறையில் இருந்த 65 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுனர். 


Rohit Sharma Century: தொடக்கத்தில் சரிந்த விக்கெட்டுகள்; 370 நாட்களுக்குப் பின்னர் சொந்த மண்ணில் சதம் விளாசிய ரோஹித் சர்மா




மேலும், அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து, காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக நடந்து வந்த 3 நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்த போது, அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.  இதனால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த நபர்களை காவல்நிலையத்திற்கு  அழைத்து வந்து விசாரணை செய்தனர்.


Ninaithen Vanthai :ஸ்கெட்ச் போட்ட குழந்தைகள்.. வாண்டடாக சிக்கிய மனோகரி - நினைத்தேன் வந்தாய் எபிசோட் அப்டேட்!




விசாரணையில் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமத்தை சேர்ந்த 35 வயதான ஜெயராஜ் ராதாநல்லூரை சேர்ந்த 30 வயதான சுபாஷ், நிம்மேலி புதுப்பேட்டையை சேர்ந்த அருண்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து 65 சவரன் தங்க நகை,1 கிலோ வெள்ளி பொருட்களை திருடி உப்பனாறு ஆற்று கரையோரம் நகைகளை குழி தோண்டி புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து அங்கு சென்று காணாமல் போன நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். மூவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.


Yezhu Kadal Yezhu Malai: மறுபடியும் நீ.. என் தோழி ஆவாயா..! மனதை உருக்கும் ஏழு கடல் ஏழு மலை முதல் பாடல் ரிலீஸ்