சிலர் இணையத்தில் வைரல் ஆவதற்கு அவ்வப்போது சில வினோதமான செயல்களை செய்து வருகிறார்கள். அதில் சில செயல்கள் ரசிக்கும் விதமாக இருந்தாலும், சில செயல்கள் அருவருக்கத்தக்க செயல்களாகவும், அதிர்ச்சி தரும் விதமாகவும் இருக்கும். இந்த நிலையில், மும்பையில் நடந்த சம்பவம் ஒன்று பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


நாய் சங்கிலியில் கட்டப்பட்ட பெண்:


மும்பையில் உள்ள பரபரப்பான வீதி ஒன்றில் வெள்ளை நிற தொப்பி அணிந்த இளம்பெண், கவுன் போன்ற ஒரு உடை அணிந்துள்ளார். அவர் கையில் கைப்பை வைத்துள்ளார். மற்றொரு கையில் கயிறு ஒன்றை நாய் சங்கிலி வைத்துள்ளார்.


அந்த நாய் சங்கிலியில் இளம்பெண் ஒருவர் நாயைப் போல கட்டப்பட்டுள்ளார். பேஷன் ஷோவில் வருவது போல தொப்பி அணிந்த பெண் முன்னே செல்ல, அவரது கையில் இருந்த சங்கிலியில் கட்டப்பட்டிருந்த அந்த பெண் முட்டிப்போட்டு சாலையிலே தவழ்ந்து வருகிறார். அந்த பெண் நாயைப் போல இந்த பெண்ணின் பின்னால் வருகிறார்.






ஒரு இடத்தில் வைத்து, கயிற்றை கையில் வைத்துள்ள தொப்பி அணிந்த பெண் நாயைப் போல பின்னால் வந்த இளம் பெண்ணை திரும்பி தலையில் தடவி கொடுத்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.


குவியும் கண்டனங்கள்:


இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பலரும், மும்பை காவல்துறையினரை டேக் செய்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்று பொது இடங்களில் நடந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள இரண்டு பெண்கள் யார்? படப்பிடிப்பிற்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் நோக்கமா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் இதுதொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க: Driverless Metro: பெங்களூர் வந்தது இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் பெட்டிகள்!


மேலும் படிக்க: Farmer Protest: 3வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.. மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை..